புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2019)

விசுவாசத்தின் நல்ல போராட்டம்

1 தீமோத்தேயு 6:11

நீயோ, தேவனுடைய மனு ஷனே இவைகளை விட் டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத் தையும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும் படி நாடு.


ஒருவேளை எங்கள் குடும்பத்திற்கு அன்றன்றையத் தேவைகளை சந் திப்பதற்குரிய அளவிற்கே பணம் இருக்கலாம். பெரிதான மாளிகை இல்லை. விதம்விதமாக உடுத்துவதற்கு ஆடைகள் இல்லை. இந்த நிலையிலே நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைக் கேட்க வேண்டிய கேள்வியானது “கர்த்தருக்குள் நான் மனரம்மியமாக இருக்கின்றேனா? எங்களுடைய குடும்பத்திலே கர்த்தருடைய சமாதானம் இருக்கின் றதா?” அப்படி இல்லாதிருக்குமென்றால், இதை இன்றே அடையும்படி நாடித் தேட வேண்டும். ஏனெனில் இயேசு எங்களுக்கு விட்டுச் சென்ற சமாதானம் இந்த உலகத்தாலும் அதன் பொருட்களாலும் உண்டான சமாதானம் அல்ல. அப்படி நாங்கள் இப்போது இரு க்கும் நிலைமையில் சமாதான த்தை அடையாவிடின், வாழ்க்கையில் எவ்வளவு ஐசுவரியம் வந்தாலும் தேவ சமாதானத்தை அடையமுடியாது. உலக செல்வத்தினால் நிம்மதி கிடைக்கும் என்ற எண்ணமுடையவர்களுக்கு அவ ர்களின் விசுவாசம் தேவனிடத்தில் இரு க்காது. நான் உயர்ந்திருந்தாலும், நான் தாழ்ந்திருந்தாலும், எந்த நிலையிலிரு ந்தாலும் இப்போதும், எப்போதும் இயே சுவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற மனநிலை எங்களில் இருக்கும் போது, ஒருவேளை இந்த உலக ஐசு வரியம் எங்களுக்கு உண்டானாலும், உலகக்கவலையும் ஐசுவரியத் தின் மயக்கமும் தேவனுடைய வசனத்தை நெருக்கிப் போடுவதில்லை. பண ஆசையினாலே தேவபிள்ளைகளாகும்படி அழைக்கப்பட்டவர்கள் தங்கள் விசுவாசம் என்னும் கேடகத்தைவிட்டு வழுவி ப்போவதால், உலகத்திலுள்ள போராட்டங்களில் தோல்வியுற்று, அநேக வேதனைக ளிளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். “போதுமெ ன்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கட வோம். எனவே உலக ஐசுவரியத்தை நாடித் தேடாமல், விசுவாச த்திலே நல்ல போராட்டத்தை போராடு நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நாங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றோம்;” என்று தேவ ஊழி யராகிய பவுல் கூறிய அறிவுரைவுரையின்படி வாழ்வோம்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, இந்த உலக ஐசுவரியத்தின் மய க்கத்தால், என் இருதயத்தில் உம்முடைய வார்த்தையை நெருக்கிப் போடாமல், விசுவாசத்தில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 13:22