புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2019)

சேனைகளின் கர்த்தர் எங்களோடு

யாத்திராகமம் 14:14

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.


இஸ்ரவேல் ஜனங்கள் சுமார் 400 ஆண்டுகள் எகிப்திலே அடிமை களாயிருந்தார்கள். அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்க ப்பட்டு, வாக்களிக்கப்பட்ட செழிப்பு நிறைந்த கானான் தேசத்திற்கு மோசே என்னும் மனிதனினூடாக வனாந்திரத்தின் வழியாக நடத்திச் செல் லப்பட்டார்கள். வனாந்திரத்திலே கடும் வெப்பம், கடும் குளிர், தண்ணீரில்லாத வறட்சி, வனவிலங்கு கள், ஊரும் பிராணிகளால் வரும் பய ங்கரங்கள், எதிரிகளால் உண்டாகும் பயங்கரங்கள் மத்தியிலே, காடும் மலை யுமான பாதை வழியாக கொண்டு செல்லப்பட்டார்கள். பல இலட்சக்கண க்கான ஜனங்கள். பல தலைமுறைக ளாக யுத்தம் செய்த அனுபவம் இல் லாதவர்கள். படைத் தலைவன் என்ற நிலைக்கு யாருமில்லை. தளபதிகள் என்று கூறுவதற்கு யாருமில்லை. யுத்த வீரர்கள் என்று அனுபவமிக்கவர்கள் எவருமில்லை. ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் அவர்களோடிருந்தார். கர்த்தர் அவர்களின் சேனைத் தலைவராக நின்றார். உங்கள் எதிரி களுக்கு பயப்படீர்களாக. தேவனாகிய கர்த்தர் நான் உங்களுக்காக யுத்தம்பண்ணுவேன் என்றார். ஆம் பிரியமானவர்களே, இயேசுவை அறிய முன்பு, நாங்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தோம். நாங்கள் பாவத்திலே அழிந்து மாய்ந்து போகாதபடிக்கு, பாவத்திலிருந்து எங் களை பரிகரிக்க, அவர் தாமே இந்த பூவுலகத்திற்கு வந்தார். எங்களை பாவ கட்டுகளிலிருந்து மீட்டு இரட்சித்தார். பாவ இருளும் பயங்கரங்க ளும் நிறைந்த உலகத்தில் எங்களை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு. அதன் வழியாக எங்களை பரம கானானாகிய பரலோகத்திற்கு வழி நடத்திச் செல்கின்றார். இந்த உலகிலே வாழும் வரைக்கும் எங்களு க்கு போராட்டங்கள் உண்டு. ஆனால் பயம் ஏதுமில்லை ஏனெனில் எங்கள் கர்த்தராகிய இயேசு தாமே எங்கள் சேனையின் தலைவராக முன் செல்கின்றார். எங்கள் சொந்த பெலத்தால் நாங்கள் இந்த உலக த்தை ஜெயிக்க முடியாது. ஆனால், மரணத்தை வென்று, உலகத்தை ஜெயித்த இயேசு எங்களோடு கூட இருக்கின்றார். சவால்களையும் பயங்கரங்களையும் கண்டு மருண்டு போய்விடாதிருங்கள் சேனையின் கர்த்தர் எங்களோடிருக்கின்றார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள சேனைகளின் தேவனே, பாவ இருள் சூழ்ந்து இருக்கும் இந்த உலகத்திலே என்னை எதிர்க்கும் சக்திகளை மேற்கொள்ளும்படி துணை நின்று என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 3:22