புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2019)

நெருக்கடி வேளையில் புகலிடம்

நீதிமொழிகள் 3:1

என் மகனே, என் போதக த்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளை களைக் காக்கக்கடவது..


மகனே, வாலிபமும் உடற்பலமும் எப்போதும் தற்போது இருப்பதைப் போல இருக்கமாட்டாது. எனவே, இந்த நாட்களிலே, உடலுக்கு தேவை யான ஊட்டச்சத்துக்களுள்ள உணவுகளை நீ சாப்பிட வேண்டும். கம் யூட்டர் சாதனங்களோடு அதிக நேரத்தைச் செலவிடாமல், நீ உடற்பயி ற்சி செய்ய வேண்டும், நேரத்திற்கு நித்திரைக்குச் செல்வதை வழக் கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று சில தசாப்த்தங்களுக்கு முன் தனது பெற் றோர் கூறிய அறிவுரையானது, வைத்தி யசாலையில் இருக்கும் ஒரு மனிதனு க்கு ஞாபகம் வந்தது. இளமைக் கால த்திலே, நான் என் வாழ்க்கையை சற்று மாற்றியமைத்திருக்கலாமே என்ற கவலை அந்த மனிதனின் மனதிலிருந் தது. ஆனால் இப்போதும் கூட வைத்தி யர் கூறும் அறிவுரையை ஏற்று நடக்க அவனுக்கு மனதில்லை. இந்த சம்பவத்தை எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாரு ங்கள். வருமுன் காப்போம் என்ற பதத்திற்கு அமைய வேதத்திலே எல் லா வயதுடையவர்களுக்கும் ஆலோசனைகள் தாராளமாக உண்டு. சரீரத் திற்கு எப்படியாக ஊட்டச்சத்துள்ள உணவு அவசியமோ அதே போல, தேவ ஆலோசனைகள் ஆத்துமாவிற்குரிய ஆன்மீக ஆகாரமாக இரு க்கின்றது. இந்த ஆலோசனைகள் எங்கள் வாழ்க்கையை கண்ணியி லிருந்து பாதுகாக்கின்றது. மனிதர்கள் தேவ ஆலோசனைகளை கேட்க மனதில்லாமல், பலவிதமான பிரச்சனைகளிலே தங்களை சிக்கவைத்துக் கொள்கின்றார்கள். அப்படியான நிலைமையில் “அட, எனக்கு போதிக் கபட்ட வார்த்தைகளை கேட்டு நான் என் வாழ்க்கையில் தீர்மானம் எடுத்திருக்கலாமே” என்று கூறிக் கொள்வார்கள். இது நோய் கொண்ட பின்பு மருந்து உட்கொள்வதைப் போன்றதாகும். சில வேளைகளிலே உட்கொள்ள வேண்டிய மருந்துகள் கசப்பான அனுபவமாக இருக்கும். தேவனுடைய வார்த்தையே எங்கள் அருமருந்தாக இருக்கின்றது. இந்த உலகத்திலே நாங்கள் ஒப்பனையாக பேசும் காரியங்களிலே குறைவு கள் இருக்கலாம். ஆனால், கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத் துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:4). கர்த்தருடைய ஆலோசனைகளிலே நடக்கும் போது, நெருக்கடிகள் அலையலையாய் வந்தாலும், அவை யாவற்றிலிமிருந்து தம்முடையவர்களை அவர் மீட் டுக் கொள்வார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, நான் சமாதானமாய் இந்த பூமி யிலே வாழும்படிக்கு உம்முடைய ஆலோசனைகளை தள்ளாமல் அவை களின்படி வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:12