புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2019)

உங்கள் மனதின் பாரம் என்ன?

1 பேதுரு 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.


இன்று உங்கள் மனதைக் கலங்கடிக்கும் பாரம் என்ன? உங்கள் மனதின் ஏக்கம் என்ன? வேதத்திலுள்ள பரிசுத்தவான்களின் வாழ் க்கையை உற்று நோக்கிப் பாருங்கள். அவர்கள் எங்களுக்கு முன் னோடிகளாக, பல பாடுகள் மத்தியிலும், தேவனுக்கு எதிராக முறு முறுக்காமல் வாழ்ந்தார்கள். உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம், பட்டயம் இவைகள் யாவற்றையும் சகித்து தேவனுடைய திருப்பணியை நிறைவேற்றி முடி த்தார்கள். (ரோமர் 8:35-39). இந்த உலகத்தினால் உண்டாகும் அசௌகரி யங்களை தங்கள் வாழ்வின் செழிப்பின் அளவுகோலாக எண்ணாமல், உலக பாடுகள் மத்தியிலும் தேவனை அதிகமாக நேசித்தார்கள். மேலும், எங்கள் மத்தியிலும் பலர் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து இந்த உலகைவிட்டு கடந்து சென்றிருக்கின்றார்கள். இன்னுமாய் தேவனுக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கும் தேவப்பிரியர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையை கவனித்துப் பாருங்கள். அவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றி சென்றார்கள். தங்கள் சரீரங்களை போஷிக்க தேவையான ஆகாரம் குறைவுபட்டாலும், உடுத்துவதற்கு மாற்று வஸ்திரங்கள் இல்லாவிடினும், தங்குமிடங்கள் அசௌகரியமாக இருந்தாலும் அவை யாவற்றையும் பொருட்படுத்தாது, தங்கள் ஆத்துமாவை போஷிக்கும் ஜீவவசனத்தை மற்றவர்களும் அறிய வேண்டும் என்று அதிகமாக பிரயாசப்படுகின்றா ர்கள். அதைப் போலவே நாங்களும் இயேசுவின் அடிச்சுவடுகளை பின் பற்றிச் செல்ல வேண்டும். இன்று எங்களை அழுத்தும், நாளையைக் குறித்ததான மனதின் பாரங்கள் ஏக்கங்களை உதறித் தள்ளி விட்டு, இந்த உலக மாயையிலே சிக்கி அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத் துமாக்களைக் குறித்ததான ஏக்கமும், நான் அறிந்து கொண்ட சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற பாரமும்; எங்க ளில் உருவாக வேண்டும். அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு என்று இயேசு கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, உங் கள் கவலைகள் எல்லாவற்றையும் கர்த்தர் மேல் வைத்து விடு ங்கள். எந்தக் காரியமும் அவருடைய அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது என்ற நிச்சயத்தோடு முன்னேறிச் செல்லுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே> உயர்வானலும்> தாழ்வானாலும் நீர் என்னு டைய நிலைமையை நன்றாக அறிந்திருக்கின்றீர் என்ற நிச்சயத்தோடு நான் உம்முடைய வழியில் நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3