புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 13, 2019)

நீங்கள் அருமையானவர்கள்

லூக்கா 12:7

உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப் பட்டிருக்கிறது, ஆகை யால் பயப்படாதிருங்கள்.


உனக்கு பிரதியீடாக நான் பலரை வேலைக்கு அமர்த்த முடியும், அது ஒரு கடினமாக செயல் அல்ல. உன்னுடைய தகமைக்கொத்த ஆயிர க்கணக்கானோர் ஊரிலே இருக்கின்றார்கள் (you are not indispensable) என ஒரு காரியாலய உரிமையாளர் தன்னுடைய ஊழியர்களில் ஒருவரு க்கு கூறினார். இன்னுமொரு விதமாக சொல்லப்போனால் உன்னிலே ஒரு விசேஷமும் இல்லை என்று அது பொருள்படும். அந்த உரிமை யாளரின் கண்களிலே குறிப்பிடப்பட்ட ஊழியர் அற்பமாகத் தோன்றினார். இந்த உலகிலே கோடானகோடி ஜனங்கள் இருக்கின்றார்களே, அவர்களில் நான் யார்? நான் பிரதியீடு செய்யப்படக் கூடியவனா (கூடியவளா)? இப்படியாக நாங்கள் வாழ்ந்து வரும் சமுகம் மத்தி யிலும்;, நாங்கள் இணைந்திருக்கும் குழு க்கள் மத்தியிலும், எங்கள் உறவினர் மத்தியிலும், எங்கள் நண்பர்கள் மத்தியிலும், நான் யார்? நான் பிரதியீடு செய்யப்படக் கூடியவனா (கூடியவளா)? இப்படியாக நாங்கள் வாழ்ந்து வரும் சமுகம் மத்தி யிலும், நாங்கள் இணைந்திருக்கும் குழு க்கள் மத்தியிலும், எங்கள் உறவினர் மத்தியிலும், எங்கள் நண்பர்கள் மத்தியிலும், நான் யார்? இந்த உலக மும், அதன் முறைமைகளுக்கு உடன்பட்டவர்களின் அளவுகோலின்படியும் நான் ஒரு பொருட்டாக கருதப்படலாம் அல்லது கருதப்படாமல் இரு க்கலாம். ஆனால், இயேசுவின் பார்வையிலே நாங்கள் விலையேறப்ப ட்டவர்கள். குழுக்களாக மட்டுமல்ல, நாங்கள் ஒவ்வொருவரும் விசேஷித்தவர்கள். அவருடைய கணக்கிலே தனித்துவமானவர்கள். அவர் உன்னதங்களிலே வாசம் செய்தாலும், சிறுமைப்பட்டவன் மேல் கண் ணோக்கமாயுள்ளார். எங்கள் தலையிலுள்ள மயிர்கள் கூட அவர் கண க்கில் இருக்கின்றது. “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்மு டைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணி யங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” எனவே உங்களை அற்பமாக எண்ணி, கடினமாக நடத்துகிறவர்களை குறித்துப் பயப்பட வேண்டாம். அவர்கள் மனக்கண்கள் திறக்கப்படும்படிக்கும், உணர்வுள்ள இருதயத்தை தேவன் கொடுக்கும்படிக்கும் அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். நீங்களோ, தாழ்மையுள்ள சிந்தையைத் தரித்தவர்களாக இரு ங்கள். நீங்கள் தேவனுடைய பார்வையிலே அருமையான மகன் அரு மையான மகள் தேவனை அறியாமல் ஒன்றும் உங்களுக்கு நேரிடாது என்ற விசுவாசத்தில் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, அற்பமான என்னையும் உம்மு டைய பிள்ளையாகத் தெரிந்து கொண்டீர். அதற்காக நன்றி! உம்மையே பற்றிக் கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 139:13