புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2019)

என் நிலையை அறிய வேண்டும்

கொலோசெயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


மனிதர்களுடைய வாழ்க்கையிலே, அவர்கள் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாமல் அவர்களை தடை செய்யக்கூடிய சில பெலவீனங் களை ஆராய்ந்து பார்ப்போம். மதுபானத்தின் வெறியினால் மனித ர்கள் மதிமயங்கிப் போய்விடுவதுண்டு. மதுபானம் மட்டுமல்ல, இன் னும் அநேக பழக்கங்கள், மனிதர்களை நிதானமாக சிந்திக்காதபடிக்கு மதிமயங்கச் செய்து விடுகின்றது. மூர் க்க வெறி கொள்ளும் மனிதர்கள், தங் களுக்கு ஏற்படும் கடும் கோபத்தில் செயல்ப்படும் போது, வாக்குவாதங்க ளும், தவறான பாi~களும், சண் டைகளும், பிரிவினைகளும், ஏன் சில வேளைகளிலே கொலைகளுக்கும் மனி தர்களை உள்ளாக்கிவிடுகின்றது. உலக ஆசைகளால் உண்டாகும் மதிமயக்கம் தேவனுடைய வார்த்தை எங் களில் நிலை கொள்ளாதபடிக்கு நெருக்கிப் போடுகின்றது. குறிப்பாக பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கின்றது. எந்த நிலை யிலும் மனிதர்கள் எடுக்கும் தீர்மானங்கள் இந்த உலக பொக்கி~ம் சார்ந்ததாகவே இருக்கும். மோக பாவத்தினால் உண்டாகும் பெலவீனம், மனிதர்களை பல கேடான வழிக்கு இட்டுச் செல்கின்றது. இதனால் மனிதர்கள் தேவன் தங்கும் ஆலயமாகிய தங்கள் சரீரங்களை கெடு த்து, தங்கள் இருதயங்களை இருளடையச் செய்துவிடுகின்றார்கள். கல்வி மற்றும் சமுதாய அந்தஸ்தினால் உண்டாகும் பெருமை, மனி தர்கள் உள்ளத்திலே, தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என் னும் எண்ணத்தை தூண்டிவிடுகின்றது. இதனால் மனிதர்கள் தேவ கிரு பையை இழந்து போய்விடுகின்றார்கள். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையை அளிக்கின்றார். விக்கிரக ஆராதனையானது மனிதர்களை தேவனை விட்டு பிரித்து விடுகின்றது. தேவ பிள்ளைகள் தாங்கள் விட்டு வந்த விக் கிரகங்களை ஆராதனை செய்யாவிடினும், அந்த ஆராதனையை செய் கின்றவர்களின் வைபவங்களிலே கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றார்கள். இப்படியாக பலவிதமான பெலவீனங்கள் எங் கள் பரிசுத்த வாழ்க்கையை சமரசம் செய்யலாம். முதற்படியாக என் நிலை என்ன என்பதை நான் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். பின்பு இவைகளை எங்களை விட்டு அகற்றிவிடும்படிக்கு, பரலோகத்தி ற்குரிய மேலான பொக்கி~ங்களை நாடித் தேட வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, முதலாவதாக, என்னிடத்திலிருக்கும் என் பெலவீனங்களை நான் உணர்ந்து, அதை விட்டு மனந்திரும்பும்ப டியான உணர்வுள்ள தாழ்மையுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:19-21