புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 19, 2019)

உற்சாகப் படுத்துங்கள்

1 தெச 5:11

ஆகையால் நீங்கள் செய் துவருகிறபடியே, ஒருவ ரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக் திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.


நான் மேற்பார்வையாளராவதற்கு, என் பெலவீனங்களிலிருந்து இன் னும் முன்னேற வேண்டிய காரியங்கள் ஐந்து இருக்கின்றது என என் னுடைய வருடாந்த முன்னேற்ற மீள் ஆய்வின் போது எங்களுடைய முன்னாள் இயக்குனர் கூறியிருந்தாரே, ஆனால் நீங்கள் எனக்கு மேற் பார்வையாளராக பதவி உயர்வு தந்ததின் காரணம் என்ன என்று தயவாக தன்னுடைய புதிய இயக்குன ரிடம், ஊழியர் ஒருவர் கேட்டார். அத ற்கு இயக்குனர்: நீ இன்னும் முன் னேற வேண்டிய ஐந்து காரியங்கள் இருப்பது உண்மை, நான் அதை நோக்கிப் பார்த்து உன்னுடைய பதவி உயர்வைத் தடுக்காமல் உன்னிடம் இருக்கும் மற்றய ஏழு நற்பண்புக ளை மையமாக வைத்து இந்த உய ர்வை அனுமதித்திருக்கின்றேன். மற்றய பெலவீனமுள்ள விடயங்களிலும் நீ சீக்கிரத்தில் முன்னேறுவாய் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு என்றார். குறைவுகளும் நிறைவுகளும் மனிதர்களுடைய வாழ்வில் உண்டு, முற்றிலும் தேறியிருக்கின்றேன் என்று கூறுவதற்கு எவரும் இல்லை. நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளை நோக்கிப் பார்க்கும் போது, உங்கள் கண்களில் என்ன தெரிகின்றது? எப்போதும் மற்றவர்களின் குறைகள் மட்டுமே தெரிகின்றதா? அப்படியாயின் நாங்கள் எங்கள் நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் தேவன் தாமே, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கி னாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட் சித்தார். இது தேவனுடைய கிருபை. இந்த அழைப்பிற்கு எவருமே பாத்திரர் அல்ல. கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலில் நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும் என்பதே பிதாவாகிய தேவனு டைய எதிர்பார்ப்பு. எனவே, எப்போதும் குறைகளையே நோக்கி பார் க்காமல் ஒவ்வொரு நாளும் நாங்கள் கிறிஸ்துவின் சாயலில் வளர் வதோடு, ஒருவரை ஒருவர், தாங்கி, தேற்றி, உற்சாகப்படுத்தி முன் னேறிச் செல்ல வேண்டும். ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லு ங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, எப்போதும் மற்றவர்களின் குறை களையே நோக்கிப் பார்;க்காமல், யாவரும் நிறைவடையும்படிக்கு மற்றவ ர்களைத் தாங்கி, தேற்றி நடத்த பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:15