புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 16, 2019)

நற்கனிகள் வெளிப்படட்டும்

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


இராஜாக்கள் ஆட்சி செய்யும் காலத்தில் இராஜ்யத்தின் பாதுகாப்பிற் காக, அவர்கள் கோட்டைகளை அமைப்பதுண்டு. அகலமான கோட்டை மதிலுக்கு வெளிப்புறமாக, அகழிகளை உண்டு பண்ணி, அங்கே பய ங்கரமான முதலைகளை வளர்;த்து வருவார்கள். கோட்டைக்குள் நுழைய முற்படுவோர் முதலைகளுக்கு இரையாகி விடுவார்கள். எங்க ளுடைய வாழ்க்கையானது எங்கள் இரட்சகரும் கோட்டையுமாகிய இயேசு வுக்குள் இருக்கின்றது. இயேசுவுக்குள் எங்களுக்கு எல்லா பாதுகாப்பும் இரு க்கின்றது. ஆனால் எங்களை அண்டி வருகின்றவர்கள் அவர்கள் யாராக இரு ந்தாலும், முதலைகளை அல்ல தேவ நற்கனிகளையே கண்டு கொள்ள வேண் டும். நீர்க்கால்களின் ஓரமாய் நடப்ப ட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரம், தன் அருகில் வரும் யாவருக்கும் தன் இயற்கையின் சுபாவமாகிய நற்க னியை கொடுப்பது போல, தேவனுடைய பிள்ளைகளுடைய வாழ்;க்கை யும் இருக்கும். அப்படியானால், எதிராளியானவன் அணுகாமல் எங்க ளை சுற்றியிருக்கும் பாதுகாப்பு என்ன? அது பரிசுத்த வாழ்வு! எப்ப டியாக நாங்கள் ஒரு விளக்கை கொளுத்தும் போது இருள் அகன்று போகின்றதோ, அதே போல தேவனுடைய பேரொளி வீசும் இடத்தில், பாவ இருள் மேற்கொள்ள முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வாழ்ந்த போது, யாவருக்கும் எப்போதும் நன்மை செய்கின்றவராய் சுற்றித் திரிந்தார். அவர் பிசாசினால் சோதிக்கப் பட்டார். அவரை சோதிக்கும்படி அவரிடத்தில் பல யூத மதத் தலை வர்கள் வந்தார்கள் ஆனால் அந்த வஞ்சகமான காரியங்கள் இயே சுவை மேற்கொள்ள முடியவில்லை. அவருடைய வேதத்திலே பிரிய மாயிருக்கிற மனு~ன், அதை இரவும் பகலும் தியானிப்பதால், துன் மார்க்கருடைய ஆலோசனை எது என்பதையும், பாவிகளுடைய வழி கள் எது என்பதையும், பரியாசக்காரர் யார் என்பதையும் நிதானித்து அறிந்து கொள்கின்றான். நல்ல மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தம் (அவருடைய வார்த்தை) இன்னதென்பதை அவன் அறிந்திருக்கின்றப டியால், எதிராளியானவன் அவனை மேற் கொள்ள முடியாது.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, இந்த உலகத்திலே உம்முடைய தெய்வீக சுபாவங்களை வெளிக்காட்டும், உம்முடைய பிள்ளையாக நான் விளங்கும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 119:101