புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2019)

தேவ வாக்கு நிறைவேறும்

யோசுவா 21:45

கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறை வேறிற்று.


தேவன் தம்முடைய வார்த்தையிலே உண்மையுள்ளவர். ஆபிரகாம் என்ற மனிதனுக்கு அவன் மனைவியாகிய சாராள் வழியாக பிள்ளை பிறக்கும் சாத்தியம் இல்லாதிருந்த போது, ஆபிரகாமுக்கு, சாராள்; வழி யாக ஒரு சந்ததியை உருவாக்குவேன் என்றும், அந்த சந்ததிக்கு ஒரு சொந்த தேசத்தை கொடுப்பேன் என்றும் வாக்களித்தார். அந்த சந்ததி உருவா கிய போது, அவர்கள் விடுதலையடை ய முடியாதபடிக்கு ஒரு பலத்த ராஜ் யத்தில் அடிமைகளாக இருந்தார்கள். வாழ்க்கை மிகவும் கடினமாக இரு க்கும் போது, சொந்த தேசத்தைக் குறி த்த எண்ணம் ஒரு கனவாக இருந்தது. ஆனால், சர்வ வல்லமையுள்ளவரு டைய வாக்குத்தத்தத்திற்கு எதிராக யார் தான் நிற்கக் கூடும்! ஒருவராலும் கூடாது. தம்முடைய ஜனங்கள் உண் மையற்றவர்களாக இருந்த போதும், அவர் தாம் உரைத்த வாக்கை நிறைவேற்றி முடித்தார். அப்படிப்பட்ட தேவன், பரம கானான் (பரலோகம்) அழைத்து செல்வேன் என்று வாக்கு கொடுத்திருக்கின்றார். இந்த பூமியிலே வாழும் நாட்களிலே அவர் எங்களுடனே கூட இருப்பேன் என்று கூறியிருக்கின்றார். எனவே, உங்கள் வாழ்க்கையை அழுத்தும் சவால்களை கண்டு சோர் ந்து போய்விடாதிருங்கள். விசுவாசத்திற்கு முரணான வார்த்தைகளை பேசாதிருங்கள். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமி ருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமி ருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்ப டுத்தியுமிருக்கிறார். இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாரு க்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லா வற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண் டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதி மான்களாக்குகிறவர். எனவே தேவனுடைய வாக்கை குறித்து உறுதியு ள்ளவர்களாயிருங்கள். அவர் கூறிய நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போவதில்லை. எல்லாம் நிறைவேறும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நிலையற்ற வாழ்வின் நிம்மதியே, உம்முடைய வாக்கில் நீர் உண்மையுள்ளவர் என்பதை எப்போதும் அறிக்கை செய்து காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:8