புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2019)

அன்பில் பரிசுத்தமுள்ளவர்கள்

1 தெசலோனிக்கேயர் 4:3

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.


பிதாவாகிய தேவன்தாமே, நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார். நாங்கள் அதிகமாக அன்பைப் பற்றிப் பேசிக் கொள்கின்றோம் ஆனால் தேவ னுடைய அன்பு பரிசுத்தமுள்ளது என்பதை மறந்து போய்விடுகின் றோம். உதாரணமாக பரிசுத்தத்தில் பொய் என்னும் வார்த்தைக்கு இடமில் லை. எனவே தேவனுடைய அன்பு உண் மையுள்ளது. அந்த உண்மையுள்ள தேவ அன்பு எங்களில் வளர்ந்து பெருக வேண்டும். எங்கள் அன்பும் உண்மையு ள்ளதாக இருக்க வேண்டும். பாவ மான செயல் ஒன்றை பாவம் இல்லை என்று சொல்வது தேவ அன்பின் குணாதிசயம் அல்ல. தேவன் எல்லோரையும் ஏற்றுக் கொள்கின்றார் ஆனால் பாவத்தை வெறுக்கின்றார். ஆனால் சில மனிதர்களோ, தேவன் அன்புள்ளவர், எல்லோரையும் ஏற்றுக் கொள்கின்றவர் என்று சொல்லி, துணிகரமான பாவங்களுக்கு தங்களை ஒப்புக் கொடுகின் றார்கள். “அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படி க்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களு க்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் பரிசு த்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிரு க்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படா மல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ள வேண்டும்” என பரிசுத்த வேதாகமத் திலே வாசிக்கின்றோம். பாலியத்திற்குரிய இச்சைகள் மலிந்து கொண் டிருக்கும் இந்த உலகத்திலே, கிறிஸ்துவின் நாளிலே கறைதிரை அற் றவர்களாக அவருக்கு முன்பாக நிற்கும்படிக்கு, எங்கள் பார்வை, சிந்தை, நடக்கையை பரிசுத்தமாய் காத்துக் கொள்ள வேண்டும். எங் களை அழைத்தவர் பரிசுத்தமுள்ளவராக இருப்பது போல நாங்களும் எல்லாவற்றிலும் பரிசுத்தமுள்ளவர்களாக வளர்ந்து பெருகுவோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பரலோக தகப்பனே, உம்முடைய பிள்ளையாக என்னை அழைத்தீர், என் பார்வை, சிந்தை, செயல் யாவும் உமக்கு முன்பாக பரிசுத்தமாயிருக்கும்படி எனக்கு கற்றுத் தந்து வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 1:4