புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 13, 2019)

உலகத்தால் கறைபடாதபடி

1 பேதுரு 2:16

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.


ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய வாழ்வை அடைய வேண்டும் என்ற மனநிலையுடையவர்களாக நாங்கள் இருக்க வேண்டும் என்று நேற்றைய நாளில் தியானித்தோம். ஆனால் எங்கள் பரிசுத்த வாழ்வை நாங்கள் எப்போதும் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறித்து இன்று தியானிப்போம். இயேசுவை அறிந்த ஒரு இளைஞன், தேவனை அறியாத, தன்னுடைய நண்பர்களோடு உணவுச் சாலைக ளுக்கு சென்று வந்தான். அவன் நண் பர்கள் மதுபானம் அருந்தும் போது, இவன் மென்பானங்களை அருந்திக் கொள்வான். இது அவனுக்கு வழக்க மாயிற்று. ஒரு நாள் சபையின் மூப்பர் அவனை அழைத்து, தம்பி, அவ்வப் போது உன் பழைய நண்பர்களுடன் சென்று வருகின்றாயே என்ன விடயம் என்று வினாவினார். இயேசு ஆயக் காரரோடும், பாவிகளோடும் விருந் துக்கு சென்றார் எனவே நானும் சென்று அவர்களுக்கு இயேசுவை பற்றி கூறுகின்றேன் என்றான். அ தற்கு மூப்பர்: இயேசு ஒரு இடத்திற்கு சென்றால் அங்கே அன்றுடன் விடுதலை உண்டாயிக்கும். இயேசு சென்ற இடமெல்லாம், அவர் பேசும் போது மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அல்லது விடுதலையடையும் வழியைக் குறித்தும், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்தும் பாவிகள் கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழி கொடுத்தார். இயேசு சென்ற இடங்களிலே, பாவிகள் தங்கள் இளமை நாட்களின் குறும்புத்தனங்களை காரியங்களையும், வாலிபத்தின் பழைய பாவங்க ளையும் பேசி, வெறி கொண்டு, கேளிக்கை செய்யும் போது, அவர் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. ஆகவே, நீ இப்படியெ ல்லாம் இயேசுவைப் போல் செய்கின்றாயா? என்று கேட்டார். அந்த இளைஞனுக்கோ தகுந்த மறுமொழி ஏதும் கொடுக்க முடியவில்லை. பிரியமானவர்களே, எங்களுடைய நண்பர்கள் இரட்சிப்படைய வேண் டும் என்ற வாஞ்சை எங்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் எங்கே இருக்கக் கூடாது என்பதைக் குறித்து, சங்கீதம் முதலாம் அதிகாரத்திலே விளக்கிக் கூறப்பட்டிருக்கின்றது. நாங்கள் எங்களது நிலையை விட்டு விலகிச் செல்லும் போது, நாளடைவில் எங்கள் வாழ்க்கை பின்மார்க்கமடைந்து போய்விடும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நீர் எனக்கு கொடுத்திருக்கும் சுயாதீனத்தை என் இச்சைகளை நிறைவேற்றும்படி பயன்படுத்தாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:17