புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 30, 2019)

கற்றுத் தரும் தேவன்

சங்கீதம் 37:28

கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர். அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை.


கிறிஸ்துவின் சாயலை அடைவதற்கு நாங்கள் மன்னிக்க வேண்டும், மன் னித்தவைகளை மறக்கவும் பழக வேண்டும் என்பதை நாங்கள் யாவ ரும் ஏற்றுக் கொள்கின்றோம். இந்தக் காரியங்களை அதிக படியாக பிரச ங்கங்களிலும் வேதப்படிப்புகளிலும் நாங்கள் கேட்கின்றோம். அவற்றை கேட்டுவிட்டு, மன்னிப்பு வழங்க வேண்டிய ஒரு சம்பவம் நடைபெ றும் போது, மன்னிப்பை வழங்க வேண் டும் என்னும் உபதேசம் ஒரு அந்நிய காரியம் போல மாறிவிடுகின்றது. “நேர டியாக, உடனுக்கு உடன் காரியங்களை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று பலர் பல கலகங்களை கிள ப்பி விடுகின்றார்கள். இதனிமித்தம் பெல வீனமுள்ளவர்களை இடறல் படுத்தி விடுகின்றார்கள். நாங்கள் குற்றம் செய் யும் போது கர்த்தர் உடனுக்குடன் அதை தீர்த்து வைத்தால் எங்களில் யார் உயிருடன் இருக்க முடியும்? எனவே, இன்றிலிருந்து மனக் குழப்பங்கள் ஏற்படும் போது அல்லது மனதுக்கு பிரியமில்லாத காரி யங்கள் நடைபெறும் போது, உடனடியாக எந்த வார்த்தைப் பிரயோ கங்களையும் செய்யாமல் பொறுமையாக இருங்கள். வேதத்தை வாசி யுங்கள். சங்கீதப் புத்தகத்திலுள்ள 37ம் 103ம் அதிகாரங்களை வாசியு ங்கள். அதன் பொருட்டு உங்கள் வழியை கர்;த்தருக்கு ஒப்புக் கொடு த்து காத்திருங்கள். காத்திருக்கும் காலத்தில் ஜெபம் செய்யுங்கள், கர்த்தருடைய வார்த்தையை நம்பி மற்றவர்களுக்கு நன்மை செய் யுங்கள். சில வேளைகளிலே காத்திருப்பு காலம் வருடங்களாக மாறி விடலாம். தம்மை நம்பி காத்திருக்கின்றவர்களின் வி~யத்தை மறந்து போவதற்கு கர்த்தர் ஒரு மனிதன் அல்ல. அவர் உண்மையுள்ளவர். காத்திருப்புக் காலத்திலே எங்களை இயேசுவைப் போல பெரும் உள் ளம் படைத்தவர்களாக மாற்றிவிடுவார். மன்னிப்பின் மேன்மையை எங் களுக்கு கற்றுத் தருவார். அலையலையாய் வந்த பெரும் பிரச்சனை கள், கால் பெரு விரலை நனைக்கும் தண்ணீரைப் போல இருக்கும்ப டிக்காய் உங்கள் நிலையை உயர்த்தி விடுவார். எனவே முதலாவதாக ஒரு சிறிய காரியத்தை மன்னிக்க ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்வி லுள்ள ஒரு சிறிய சம்பவத்தை தேவனிடம் ஒப்புக் கொடுக்க ஆரம்பி யுங்கள். எங்கள் உள்ளான நல்ல நோக்கத்தை அறிகின்ற தேவன், எங்களைப் பெலப்படுத்தி இன்னும் அதிகமாக பெருகச் செய்வார்.

ஜெபம்:

கற்றுத் தந்து நடத்தும் தேவனே, நான் மற்றவர்களை மன்னித்து, உம்மை நம்பி, உம்முடைய நேரத்திற்காக காத்திருக்கும் படிக்கு கற்றுத் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:7