புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 29, 2019)

நீங்கள் முன்குறிக்கப்பட்டவர்கள்

ரோமர் 8:29

தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.


நாம் அனைவரும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்து வினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் படிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். அதாவது, கிறிஸ்துவின் பண்புகளும், சுபாவங்களும் எங்களிலே உருவாக்கப்பட்டு, அவை எங்களில் வள ர்ந்து நிறைவடைய வேண்டும். எங்க ளுடைய நாளாந்த வாழ்விலே கிறிஸ் துவின் சாயலில் வளர்வதெப்படி? அவ ருடைய சுபாவங்களில் ஒன்றை குறி த்து இன்று ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவ ங்களை வெறுக்கின்றார் ஆனால் பாவி கள் தங்களை பாவங்களிலிருந்து விடு தலையடையும்படி விருப்பமுள்ளவ ராக இருக்கின்றார். இயேசு இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே, பலதரப்பட்ட பாவ கட்டுகளில் சிக்குண்டு, சமுதாயத்தினாலே தள்ளப்பட்டவர்கள் பலரை சந்தித்தார். அவர்கள் செய்த பாவங்கள் யாவற்றையும் மன்னித்தார். இனி பாவம் செய்யாதே என்று கூறினார். அன்று மட்டுமல்ல இன்றும் எங்கள் குற் றங்களை மன்னிக்கின்றார். தம்முடைய இரக்கத்தை எங்கள் மேல் காண்பித்து வருகின்றார். ஆகவே மன்னிப்பை வழங்குவது அவரு டைய சுபாவமாக இருக்கின்றது.; தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கும் போதும், “நாங்கள் மற்றவர்கள் எங்களுக்கு எதிராக செய்த தப்பிதங்களை மன்னிப்பது போல எங்கள் பாவங்களை மன்னி த்தருளும்” என ஜெபிக்கும்படி கற்றுக் கொடுத்தார். எனவே, இயேசு வின் சாயலில் நாங்கள் வளர்ந்து நிறைவடைவதற்கு மற்றவர்கள் எங் களுக்கு எதிராக செய்யும் குற்றங்களை மன்னிக்க பழகிக் கொள்ள வேண்டும். எத்தனை தடவவைகள் குற்றம் செய்தவர்களை மன்னி ப்பது? எப்படிப்பட்ட குற்றங்களை மன்னிப்பது? எத்தனை தடவைகள் இயேசு உங்கள் குற்றங்களை மன்னித்திருக்கின்றார்? எத்தனை தட வைகள் இன்னும் மன்னிக்க தயை பெருத்தவராயிருக்கின்றார்? அத் தனை தடவைகள் நீங்களும் மன்னிக்க வேண்டும். எப்படி எங்கள் குற்றங்களை இயேசு மன்னிக்கின்றாரோ அப்படியே மற்றவர்கள் செய்த குற்றங்களையும் நாங்கள் மன்னிக்க வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, இயேசுவின் பூரண சாயல் அடையும்படி என்னை முன்குறித்து அழைத்தீர். அந்த அழைப்பிற்கு பாத்திரனாக நான் வாழும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:11