புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 27, 2019)

நற்சாட்சியாய் வாழுவோம்

1 பேதுரு 2:12

அவர்கள் உங்கள் நற்கிரி யைகளைக்கண்டு அவற் றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகி மைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்ந டக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத் திசொல்லுகிறேன்.


பெற்றோரே எங்களுக்கு எல்லாம் என்று வாழ்ந்த சிறு பிள்ளைகள், வாலிபப் பருவத்தை அடைந்ததும் அவர்களுடைய பேச்சின் தொனி மாறிவிடுகின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சில சம யங்களிலே “உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்லும் பிள் ளைகளும் இருக்கின்றார்கள். இன்னும் சிலர் வாலிபப் பருவம் அடை ந்ததும், தாய் தந்தையர் முன்பாக தங் கள் நடத்தையை காத்துக் கொண்டிரு ந்தாலும், தங்கள் நண்பர்களை சந்தி க்கும் போது, அவர்களோடு சேர்ந்து அவர்கள் தங்கள் பெற்றோர், தங்களை எரிச்சலடையச் செய்கின்றார்கள் என்று கூறிக் கொள்வார்கள். சில வேளைக ளிலே தங்கள் நண்பர்கள் மத்தியிலே தனித்துவமானவர்களாக தங்களை காண்பிக்க வெட்கமடைவதால், அவர் கள் எப்படியான மனோநிலையோடு இருக்கின்றார்களோ, அவ்வண்ணமா கவே தாங்களும் இருக்கின்றோம் என்று காண்பித்துக் கொள்கின்றார்கள். இவர் கள் யாவர் மத்தியிலும், தங்கள் பெற் றோரின் நிலையை நன்கு அறிந்து, வீட்டிலும், வெளியிலும் உண்மை மன துடன் அவர்களை நேசிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இத ற்கொத்ததாக, தேவனை அறியாத நண்பர்கள், உறவினர் மத்தியிலே நாங்கள் இருக்கும் போது, எங்கள் மனோநிலை எப்படியாக இருக்கி ன்றது? அவர்கள் மத்தியில், எங்கள் நடக்கையால் பரமபிதாவினுடைய நாமம் தூஷிக்கப்படும்படியாக வார்த்தைகளை நாங்கள் பேசக்கூடாது. எங்கள் கிரியைகள் யாவும் பரம பிதாவை மகிமைப் படுத்த வேண் டும். எந்த நிலையிலும் எங்கள் தேவனைக் குறித்து நாங்கள் வெட்கம டையக் கூடாது. அதாவது, நான் என்னை வித்தியாசமாகக் காட்டினால் என் நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்னை பரியாசம் பண்ணுவா ர்கள் அல்லது என்னை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்று அவ ர்கள் விரும்பும் காரியங்களுக்கு நாங்கள் உடந்தையாக இருக்கக்கூ டாது. எங்கள் நல் நடக்கையைக் யாவர் மத்தியிலும் நாங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, எங்கு சென்றாலும் எந்த சூழ்நிலை யிலும் யாவர் மத்தியிலும் என் நல் நடக்கையைக் காத்துக் கொள்ளும்ப டிக்காய், எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:16