புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 18, 2019)

இலக்கின்மேல் கண்கள்

மத்தேயு 7:20

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டு த்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ள த்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளி னாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களை யும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப் படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனி களைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமா ட்டாது. கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினி யிலே போடப்படும் என்று இயேசு கூறியிருக்கின்றார். வேதப்புரட்டர் களின் கனிகள் கெட்டது என்பதை வெளிப்படுத்தும்படிக்கு நாங்கள் கிரியைகளை நடப்பிக்கத் தேவையில்லை. குறித்த காலத்தில் அவ ர்களுடைய கனிகள் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தும். எங் கள் கண்களை பந்தயப்பொருளாகிய பரலோகத்திலிருந்து வேறு இட ங்களுக்கு திசை திருப்புவதே எதிராளியாகிய பிசாசானவனின் நோக் கம். எனவே நாங்கள் மற்றவர்களுடைய வாழ்க்கையின் குறைகளை பற்றி விமர்சிப்பதினால் எங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை இழந்து விடாதபடிக்கு மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். கால த்திற்கு முன் எவரையும் எந்தக் காரியத்தையும் குறித்து நியாயந்தீர்க் காமல், தேவனுடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். புத்தியு ள்ள ஐந்து கன்னிகைகளைப் போல, மணவாட்டி சபையாகிய நாங் கள், எங்கள் விளக்கின் எண்ணை குறையாமல், மணவாளனாகிய இயே சுவின் வருகைக்காக விழிப்புடன் காத்திருக்க வேண்டும். எங்கள் கண் களை வேறு கவனங்களுக்கு செலுத்துவோமாக இருந்தால், போகும் பாதையில் நாங்களும் இடறி விழுந்து விடுவோம். கர்த்தரோடு வாழு ங்கள். நாங்கள் அவரோடு இருந்தால், யார் எங்களை அவருடைய கர த்திலிருந்து பறித்துக் கொள்ளக் கூடும்? என் ஆடுகள் என் சத்தத்தி ற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவை கள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவ னைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை என்று கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, பரலோகம் சென்றடையும் இலக்கை ஒரு போதும் நான் மறந்து போகாதபடிக்கு எப்போதும் உம்முடைய சத்தத் திற்கு கீழ்ப்படிந்து உம்மை பின்பற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:27-28