புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2019)

மிகுந்த கிருபையுள்ளவர்

சங்கீதம் 103:8

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.


தொலைந்துபோன கெட்ட குமாரன் அழிந்து போவதை பிதாவாகிய தேவன் விரும்பவில்லை. நினிவே பட்டணத்து மக்கள், தங்கள் பொல் லாத வழிகளால் நிர்மூலமாக்கப்படுவதை தேவன் விரும்பவில்லை. தன்னுடைய வார்த்ததையைக் கேளாமல் பல ஆண்டுகளாக பாவம் செய்து வந்த தம்முடைய ஜனங்கள் முற்றாக மாண்டு போவதை அவர் விரும்பவில்லை. ஒரு வேளை குறிப்பிட்ட ஒரு மனிதன் தேவனுக்கு எதிராகவும் எங்களுக்கு எதிராகவும் குற்றம் செய்து, எங்கள் சமுகத்தை விட்டோ அல்லது ஐக்கியத்தைவிட்டோ போய்விடலாம். அந்த மனிதனும் அழி ந்து போவதை தேவன் விரும்பவி ல்லை. குற்றம் செய்த மனிதன் நானாக இருக்கலாம் அல்லது நீங்களாக இரு க்கலாம். யாராக இருந்தாலும் தேவனிடம் பட்சபாதம் இல்லை. நான் யாராக இருந்தாலும், ஏதோ ஒரு காரியத்திற்காக உங்கள் மேல் வெறுப்பு வைக்கலாம், அதனால் உங்களைக் குறித்த தேவனுடைய அன்பு தணிந்து போவதில்லை. அது போல, ஒரு வேளை நீங்கள் என்னை வெறுத்து தள்ளிவிடலாம், ஆனால் தேவனுடைய அணை க்கும் கரங்கள் தளர்ந்து போவதில்லை. தேவனுடைய வாக்குத்தத்த ங்கள், அவருடைய மனதுருக்கம், என்னுடைய பெலவீன நேரங்களு க்கு மாத்திரமல்ல. என்னுடைய பெலவீன நேரங்களில் எனக்கு இரங் குவது போல தேவன் மற்றவர்களுக்கும் இரங்குகின்றார். அவர் நம் முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்ப டுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கி றது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூர மாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். எனவே நாங்கள் பரம பிதாவை அறிகின்ற அறிவிலே அனுதினமும் நாங்கள் வளர வேண்டும். உண் மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், அவர் சமீப மாயிருக்கிறார். யாவரும் மனந்திரும்பி தம்மிடம் சேரும்படியாய் நீடிய பொறு யுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நீர் யாவருக்கும் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்பதை உணர்ந்து சுயநல மற்றவனா(ளா)ய் வாழ என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:15