புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 11, 2019)

பரம தேசத்தின் பிரஜைகள்

லூக்கா 15:7

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோ கத்தில் மிகுந்த சந்தோ ஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொ ல்லுகிறேன்.


எங்களுடைய நிரந்;தரமான குடியிருப்பு இங்கு இல்லை. எங்கள் விசு வாசக் கண்களினால் காணும் பரம தேசத்தை நோக்கி சென்று கொண் டிருக்கின்றோம். எனவே, அந்த பரம தேசத்தின் பிரஜைகளுக்குரிய சுபா வங்களை தரித்தவர்களாகும்படி நாளுக்கு நாள் இந்தப் பூமிக்குரிய சுபாவங்களைக் களைந்து விண்ணவருக்குரிய சுபாவங்களை தரித்தவ ர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம். பரலோகத்திற்குரியவர்களின் சுபாவங்கள் என்ன என்று எங்களிடம் கேட்கப்பட்டால், நாங்கள் அநேக காரி யங்களை கூறிக் கொள்வோம். ஆனால் இன்று நாங்கள் அவற்றுள் ஒன்றைத் தியானிப்போம். நேற்றய நாளிலே கெட் டுப்போன இளைய குமாரனின் மன ந்திரும்புதலைக் குறித்தும், பரம தந் தையின் உள்ளத்தைக் குறித்தும் பார் த்தோம். மனந்திரும்பி வீடு திரும்பிய குமாரனினால் அந்த வீடு விழாக் கோலம் பூண்டது. ஆனால், உண்மை யும் உத்தமுமாய் தன் தந்தைக்கு கீழ் படிந்திருந்த மூத்த குமாரன், தன் அன்றாட கடமைகளை முடித்து, வேலையில் இருந்து திரும்பும் போது, நடந்த சம்பவத்தை கேள்வி ப்பட்டு, அந்த சந்தோஷத்திலே பங்கேற்க மனதில்லாதவனாய் இருந் தான். மூத்தவன் தந்தைக்கு ஏற்றவனாக வாழ்ந்து வந்தாலும், தந்தை யின் உள்ளத்தை இன்னும் அறியாதவனாக இருந்தான். சில வேளைக ளிலே நாங்களும் இந்த நிலைக்கு தள்ளப்படலாம். தேவனுடைய ஊழி யத்திற்கு ஒத்தாசையாக பல பிரயாசங்களை செய்கின்றோம். ஏன்? நாங்கள் மட்டும் பரலோகம் செல்லும்படியாகவா? இல்லை ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற நோக்க த்தோடே செயற்படவேண்டும். நாங்கள் பரம தேசத்தின் பிரஜைகளுக் குரிய சுபாவமுடையவர்களாக வேண்டும் என்றால், கெட்டுப் போகின்ற வர்கள் தேவனிடம் திரும்பும் போது, எங்கள் உள்ளத்தில் பேரான ந்தம் பொங்கி வழிய வேண்டும். ஏனெனில் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று இயேசு கூறினார். எனவே எங்கள் பிரயாசங்களின் பலனை நாங்கள் காணும்போது, தேவனோடு இருக்கும் நாங்கள் தேவனைப் போல சந்தோஷமடைய வேண்டும்.

ஜெபம்:

கருணை நிறைந்த தேவனே, காலத்தை வீணாக்காமல், ஆதாயப்படுத்திக் கொள்ளத்தக்கதாக, நன்மை செய்யும் மனநிலையை எனக்கு தந்து உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 17:16