புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2019)

சாந்த குணம்

பிலிப்பியர் 4:5

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


ஆபத்து நேரத்திலே ஒரு அயலவனுக்கு ஓரு மனிதன் உதவி செய் தான். காலப் போக்கில், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட சில முரண்பா டுகளினால் ஒருவரை ஒருவர் வார்த்தைகளினால் தாக்கிக் கொண் டார்கள். உதவியை செய்தவன் மற்றவனை நோக்கி “நான் உன் ஆபத்து நேரத்திலே செய்த உதவியை மறந்த நன்றியற்ற மனிதனாக இருக்கின்றாய்” என்றான். உதவியைப் பெற்றவன், “நீ எனக்கு உதவி செய்திருக்காவிட்டால் கடவுள் இன்னு மொருவரை அனுப்பியிருப்பார்” என் றான். இந்த கடுமையான, வார்த்தைப் பிரயோகங்கள், அந்த மனிதர்களின் உள் ளத்தின் ஆழத்தில் இருக்கும் அகங் காரத்தை எடுத்துக் காட்டுகின்றது. தேவ னாகிய கர்த்தர் தம்முடைய கிரு பையை பல வழிகளினாலே எங்களு க்கு வெளிப்படுத்தி வருகின்றார். எனவே நாங்கள் எங்களைக் குறித்து மேன்மைபாராட்டாமல், தேவனுக்கு முன்பாக எங்கள் இருதயத்திலே தாழ்மையடைய வேண்டும். உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற் றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங் கள் என்று இயேசு கூறியிருக்கின்றார். அதே வேளையிலே கண்கண்ட மனி தன் வழியாக பெற்ற உதவியை அற்பமாக்குகின்றவன், கண் காணாத தேவனுக்கு எப்படி நன்றியறிதலுள்ளவனாக இருக்க முடி யும்? எனவே எங்கள் இருதயத்தை கர்த்தருக்கு முன்பாக செம்மைப்ப டுத்த வேண்டும். அப்போது, இருதயத்திலிருந்து செம்மையான வார்த் தைகள் எங்கள் வாயின் வழியாக புறப்படும். எங்கள் சாந்தகுணம் எல் லா மனு~ருக்கும் தெரிந்திருப்பதாக. எனவே, உதவியை பெற்றவ னின் நன்றியற்ற வார்த்தைகள் உங்களை வேதனைப் படுத்தினால் அதை கர்த்தர் அறிந்திருக்கின்றார். உதவி செய்தவன் வாயிலிருந்து பெருமையான வார்த்தைகளால் உண்டாகும் மனவேதனைiயும் கர்த் தர் அறிந்திருக்கின்றார். உதாரத்துவ குணமுள்ளவர்கள் இன்னுமாய் தாராளமாய் மன்னிப்பை அள்ளி வழங்;குவதிலும், நன்மையை பெற்ற வர்கள், இன்னும் அதிகமாக தங்கள் நன்றியைத் தெரிவிப்பதிலும் வள ர்ந்து பெருக வேண்டும். எந்த வேளையிலும் எங்கள் வார்த்தைகளி னாலும் கிரியைகளினாலும் கர்த்தரையே உயர்த்துவோம்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, என் வார்த்தைகளை உமக்கு முன்பாக செம்மையுள்ளதாக காத்துக் கொள்ளும்படிக்கு, தாழ்மையுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 17:10