புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2019)

அழியாமையை நோக்கி...

1 கொரிந்தியர் 15:53

அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும்.


ஸ்தேவன் கிறிஸ்துவின் இரத்த சாட்சியாக கொல்லப்பட்ட நாட்க ளில், அப்போஸ்தலராகிய பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இன்னும் அறியாதிருந்தார். அந்நாட்களிலே சபையிலே பெரிதான உப த்திரவம் உண்டாயிற்று. யூத மதத்தை சார்ந்த சவுல் (பின்பு பவுல் என்று அழைக்கப்பட்டவர்) வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபை யைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். இவ ர்கள் இந்த உலகத்தினால் உண்டான நிந்தைகளையும் அடிகளையும் கட்டுக ளையும் காவலையும் அநுபவித்தார் கள்;. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்ப ட்டு மரித்தார்கள், குறைவையும் உப த்திரவத்தையும் துன்பத்தையும் அநுப வித்தார்கள். ஆனாலும், இவைகள் ஒன் றும் அவர்களின் விசுவாசத்தை அவித்துப்போடவில்லை. கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம் சரீரத்திலே பல பாடுகளை அனுபவித்தாலும், அவர்களுக்குள்ளே மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. எந்த மனித ர்களும், எந்த உலக கிரியைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட திருப்பணியை நிறுத்த முடியவில்லை. வேதத்தில் எழுதியபடி “கடைசி எக்காளம் தொனிக்கும் போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொ ழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக் கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பா ர்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியா மையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேது வாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.” இந்த நிச்சயத்தையுடையவர்களாய், தாங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியை துரத்துண்டிருந்த இடங்களெல்லாம் அறிவித்தார்கள். எனவே, இந்த உலகிலே உங்களைச் சூழ நடைபெறும் சம்பவங்களையும், விசு வாசத் துரோகங்களையும் கண்டு சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை நடப்பியுங்கள். இயேசு கிறிஸ்து வழியாக நித்திய வாழ்வு உண்டு என்று, பெற்ற நற்செய்தியை அறிவியுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகத்தைக் கலக்கும் பயங்கரங்களை கண்டு நான் மருளாதடிக்கு, உம்முடைய திருவசனத்தை கூறும்படிக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:33-38