புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2019)

ஸ்தேவான்

அப்போஸ்தலர் 7:56

அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷ குமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.


பந்தி விசாரிப்பின் பணிக்காக தேவனால் நியமிக்கப்பட்டவர்களில் ஒரு வர் ஸ்தேவான். இந்த உதவி ஊழியத்தை பெற்ற ஸ்தேவன், விசுவா சத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்;. அந்நாட்க ளிலிருந்த யூத மத ஆலயத்தை சேர்ந்தவர்களில் சிலர் இதனால் மிக வும் எரிச்சலடைந்தார்கள். அவர்களில் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்க ம் பண்ணினார்கள். ஆனால், அவர் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற் போயிற்று. தங்களுடைய மதத்தின் அடி ப்படையில் அவர்மேல் குற்றம் பிடிக்க வகை தேடினார்கள். அப்பொழுது அவ ர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோ தமாக இவன் தூஷண வார்த்தைக ளைப் பேசக்கேட்டோம் என்று சொல் லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி, ஜனங்களையும் யூத மதத்தின் மூப் பரையும் அவர்களின் வேத வல்லுனர்களையும் எழுப்பிவிட்டு; அவன் மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;, இந்த மனிதன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார் த்தைகளை ஓயாமற் பேசுகிறான்; என்று பொய்சாட்சிகளை ஏற்படுத்தி னார்கள். ஒருவரும் கெட்டு நரகத்திலே மாண்டு போகாமல் விடுதலை யடையும்படி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பின் நற்செய் தியை அறிவித்த ஸ்தேவானுக்கு இதுவே யூதர்கள் மத்தியிலே கிடை த்த வரவேற்பு. ஸ்தேவான் ஜனங்களுக்கு ஞான நன்மையை எடுத்துக் கூறினார், ஆனால் ஜனங்களோ அவருக்கு தீமை செய்ய ஆர்வமாய் இருந்தார்கள். அவர் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டு, மூர்க்கமடைந்து, அவர்; மேல் பாய்ந்து, நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவரைக் கல்லெறிந்தார்கள். இதுவே இந்த உலகத்திலே அவருக்கு கிடைத்த பிரியாவிடை. ஆனால், அவரோ, வானங்கள் திறந்திருக்கிற தையும், இயேசு கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கின்ற பரலோகத்தின் அற்புதக் காட்சியையும் கண்டார். உலகத்தாரின் பார் வையிலே அவமானமடைந்தாலும், பரலோகத்திலே ஈடு இணையில் லாத மகிமையின் வரவேற்பு அவருக்கு கிடைத்தது.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகம் வெறுத்துத் தள்ளினாலும், நீர் உத்தம ஊழியன் என்று என்னை வரவேற்கும்படியான வாழ்க்கை வாழும்படியாக என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தெச 2:14-17