புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 30, 2019)

மனத்தாழ்மை

யாக்கோபு 4:6

தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார் கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராதத னால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உப வாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெ ல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணி னான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெ டுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியா கிய என்மேல் கிருபையாயிரும் என் றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக் குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ் த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு ஒரு உவமையைக் கூறினார். தேவனுடைய சமுகத்திற்கு ஜெபிக்கும்படி நாங்கள் செல்லும் போது, தாழ்மையுள்ளவர்களாக செல்ல வேண்டும். எங்கள் வாழ்க்கையில் ஏதாவது நீதியின் கிரியை இரு க்குமென்றால், அதுவும் தேவனுடைய கிருபையாக இருக்கின்றது. உள்ளத்தை ஆராய்ந்தறிகின்ற தேவன் எங்கள் வாழ்க்கைiயும், அந் தரங்கத்திலே நாங்கள் செய்யும் கிரியைகளையும் அறிந்திருக்கின்றார்;. எனவே தேவனுடைய சமுகத்திலே உண்மையுள்ளவர்களாக, எங்கள் நிலையை எடுத்துக் கூற வேண்டும். நாங்கள் நற்கிரியைகள் செய்ய வேண்டும் என்று தேவன் விருப்பமுள்ளவராக இருக்கின்றார். ஆனால் எங்கள் இருதயத்தில் எங்கள் கிரியைகளைக் குறித்து ஏதாவது பெருமை இருக்கும் என்றால், அதை தேவனிடம் கூற வேண்டும். ஆண்டவரே இந்த பெருமையான சிந்தையிலிருந்து அடியேனை விடு தலையாக்கும் என்று ஜெபிக்க வேண்டும். அவர் நிச்சயமாக எங்கள் ஜெபத்தைக் கேட்டு நன்மையான ஈவுகளை பரத்திலிருந்து எங்க ளுக்குப் பொழிந்தருள்வார். எனவே எந்தக் காரியத்தைக் குறித்தும் பெருமையடையாமல், கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

ஜெபம்:

அன்பான பிதாவே, மேன்மைபாரட்டுவதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. என்னில் இருக்கும் எல்லாவிதமான பெருமையான சிந்தைகளையும் உமது பெலத்தினால் அகற்றிவிட என்னைப் பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 18:10-14