புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 28, 2019)

நியமிக்கப்பட்டிருக்கும் ஓட்டம்

பிலிப்பியர் 2:15

கோணலும் மாறுபாடுமா ன சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,


மற்றய மனிதர்கள் செய்யும் தவறுகளால் நாங்கள் இடறலடையாதப டிக்கு எங்கள் சமாதானத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். எடுத் துக்காட்டாக, நெடுஞ்சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் ஒரு வாலிபன் தான் நினைத்தபடி வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டி ருந்தான். அயல் வாசிகளில் ஒருவன் அவனுக்கு பலமுறை புத்திமதி கூறியும் அதை அவன் பொருட்படுத் தாமல், முன்பு செய்தது போல செய்து வந்தான். அந்த வாலிபனின் நிலையை கண்ட அயல் வாசி குழப்பமடைந்தான். இந்த சம்பவத்திலே அந்த வாலிபனே குற்றம் செய்து திரிகின்றான், ஆனால் அந்த வாலிபனின் செயல்களினால் குற்றம் செய்யாத அந்த அயல் வாசி தன் சமாதானத்தை கெடுத்துக் கொண் டான். இந்த சம்பவத்தை எங்கள் வாழ் க்கையோடு இணைத்து சிந்தித்துப் பார்ப்போம். சபையிலுள்ள மனிதன் ஒருவன் தேவனுக்கு எதிரான காரியம் ஒன்றை செய்து விட்டான். அது தவறு என்று அறிந்தும், ஆலோசனைகளை தள்ளிவிட்டு, மனந்திரும்ப மனதில்லாமல் தான் செய்வதை துணிகரமாக செய்து வந்தான். தனக்கும் தேவனுக்கும் இடையிலுள்ள உறவை அவன் உடைத்துப் போடுவதால், அந்த மனிதன் தன் ஆத்துமாவிற்கு கேடு விளைவித்துக் கொள்கின்றான்;. அந்த மனிதனின் வாழ்வைப் பார்த்து நாங்கள் இடறல் அடைந்து போகக் கூடாது. மோசே என்னும் தேவ ஊழியர், எகிப்தின் அடிமை த்தனதிலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து சென்ற போது, அவர்கள் மத்தியிலும் கலகக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் எப் பொழுதும் வழுவிப்போகின்ற இருதயமுடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும் காலேப்பு, யோசுவா போன்ற மனிதர்கள் தங்கள் இலக்கின் மேல் கண்களை பதிய வைத்திருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான ஜன ங்கள் கலகம் செய்த போதும் அவர்கள் இடறலடையவில்லை. தேவ னையே நம்பி இருந்தார்கள். அதுபோல, நாங்களும் எங்கள் கண் களை இயேசுவின் மேல் பதிய வைக்க வேண்டும். நமக்கு நியமித் திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;. ஒரு வேளை பலர் வழி விலகிப்போனாலும் நாங்கள் மாசற்றவர்களாக, தேவ சித்த த்தை நிறைவேற்ற வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, ஜீவ ஓட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் கூட வழிவிலகிப்போனாலும் உம்முடைய மாசற்ற பிள்ளையாய் நான் என் ஓட்டத்தை பொறுமையோடு ஓடி முடிக்க கிருபை செய்யும் இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3