புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2019)

மகிமையின் ராஜ்யத்தை நோக்கி

பிலிப்பியர் 3:20

நம்முடைய குடியிருப் போ பரலோகத்திலிருக் கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயே சுகிறிஸ்து என்னும் இர ட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


கர்த்தராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, ரோம ராஜ்யம் மிகவும் வல்லமைமிக்க ராஜ்யமாக இருந்தது. அந்நாட்களிலே ரோம குடியுரிமை உடையவர்கள் அதைக் குறித்து மேன்மைபாராட்டுவார்கள். அதே போல இந்த நாட்களிலும், மேற்கத்தைய நாடுகளின் குடியுரிமையை பெறுவதை பலர் மேன்மையாக எண்ணுகின்றார்கள். இவை யாவும் எட்டாப்பழம் என்று ஏக் கத்துடன் வாழ்பவர்கள் பலர். ஆனால் இந்த ராஜ்யங்கள் யாவும் ஒரு நாள் அழிந்து போய்விடும். அந்நாளிலே அதன் வல்லமையும் மகிமையும் ஒழி ந்து போகும். அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய பொன் நாடாகிய பர லோகத்தின் குடியுரிமையை பெறும்ப டியாய் நாங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றோம். இப்போது விசுவாசக் கண் களால் காணும் அந்த ராஜ்யத்தை ஒரு நாள் முகமுகமாய் தரிசிப்போம். ஆன படியினாலே நாங்கள் சோர்ந்துபோகிற தில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெ னில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவை களோ நித்தியமானவைகள். அந்த நித்திய ராஜ்யத்திலே ஒரு சாப முமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவரு டைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது. விளக்கும் சூரியனு டைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை. தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். இந்த உலக பாடுகளைக் கண்டு சோர்ந்து போகா திருங்கள். விசுவாசத்திலே நிலைத்திருங்கள். ஜீவ ஓட்டத்தை வெற்றி யோடு ஓடி முடிக்கத்தக்கதாக தேவன் பெலன் தந்து நடத்துவார்.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே, நிலையில்லாத இந்த உலத்திலுள்ளவைகளை நாடித்தேடாமல், நிலையான உம்முடைய ராஜ்யத்தை நோக்கி ஓட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16-18