புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2019)

இயேசுவின் சீஷர்கள் யார்?

யோவான் 15:4

கொடியானது திராட்சச் செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.


இயேசு கிறிஸ்து தாமே, பூலோக திருப்பணியை நிறைவேற்றிய பின், பரலோகத்திற்கு எழுந்தருளும் முன்பாக, தமது சீஷர்களை நோக்கி: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவை யும் அவர்கள் கைக்கொள்ளும் படி அவ ர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று கூறினார். எப்படி கர்த்தராகிய இயேசுவின் சீஷராக வாழ்வது? இயேசு சொன்னார்: நானே திராட்சச்செடி, நீங்கள் கொடி கள். ஒருவன் என்னிலும் நான் அவனி லும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல் லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திரா விட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார் த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெ துவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிக ளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். ஆம் பிரியமானவர்களே, எப்படியாக ஒரு மரத்தின் கிளை (திராட்சைக் கொடி) அந்த மரத்தோடு (திராட்சை செடி) இணைந்திரு க்கின்றதோ, அந்தப்படி நாங்களும், இயேசு கிறிஸ்துவோடு இணைந் திருக்க வேண்டும். ஒரு கிளையானது எப்போது அந்த மரத்திலிருந்து துண்டிக்கப்பட்டு போகின்றதோ, அன்றோடு அந்த கிளையானது இனி அந்த மரத்திற்குரியதல்ல. அதுபோலவே, கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையான அம்சமானது நாங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும். அவருடைய கற்பனைகளை நிறைவேற்றும் போது நாங் கள் அவரோடு இணைந்திருக்கின்றோம். அவரோடு இணைந்திருக்கும் போது நாங்கள் இயேசுவின் சீஷர்களாக இருப்போம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இயேசுவோடு இணைந்திருக்கும் வாழ்வு வாழும்படியாய், உம்முடைய கற்பனைகளை மனதார கைகொள்ளும்படிக்கு என் மனக்கண்களை திறந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 28:19-20