தியானம் (ஆவணி 11, 2019)
ஆவிக்குரிய உறவு
மத்தேயு 12:50
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
எங்கள் ஆத்துமா இரட்சிப்பு இந்த உலகம் தரும் பதவி அந்தஸ்து களாலும், எங்கள் கிரியைகளாலும் உண்டாகவில்லை. “கிருபையி னாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாரா ட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” எனவே மாம் சத்திற்குரிய பெருமை பாராட்டுதலால் உண்டாகும் பலன் அற்பமே. ஓரு சமயம், இயேசுவின் இனத்தார், இயேசு யார் என்பதையும் அவரு டைய பூலோக பணியையும் அறியாத தினால், தங்கள் அறிவின்படி அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். (மாற்கு 3:21) அப்பொழுது அவரு டைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கு ம்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினா ர்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்தி ருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என்றார். தேவ சித் தம் நிறைவேறும்படிக்காய், இயேசு தாமே இந்த பூமியிலே, பிதா வாகிய தேவனுடைய சித்தப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தார். இது அந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு பெரிதான பாக்கியம். அந்த மேன்மைபாராட்டுதலினால் அந்தக் குடும்பத்தார் நித்திய வாழ்வை அடைய முடியாது. இயேசுவே இரட்சகர் என்று தங்கள் இருதயத் திலே விசுவாசித்து, தேவ சித்தத்தை தங்கள் வாழ்வில் செய்பவ ர்களே அவருடைய ராஜ்யத்தில் பங்காளிகளாக இருப்பார்கள். மாம்ச த்தில் உண்டாகும் மேன்மைபராட்டுதலினால் தேவனை ஒருவரும் அறிய முடியாது. தேவ சித்தப்படி உண்டாகும் ஆவிக்குரிய உறவி னாலேயே நாங்கள் இயேசுவோடு இணைந்து கொள்ள முடியும். எனவே இந்த உலகத்திற்குரிய மேன்மைகளை களைந்துவிட்டு தேவ சித்தத்தை எங்கள் வாழ்வில் நடப்பிப்போம்.
ஜெபம்:
கிருபை நிறைந்த தேவனே, அழிந்து போகும் இந்த உலகத்திற்குரிய காரியங்களினால் பெருமையடையாமல், ஆவிக்குரிய தேவ ஆசீர்வாதங்களை நாடித்தேட என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 6:14