புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2019)

சிறிய காரியங்கள்

உன்னதப்பாட்டு 2:15

திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிக ளையும் சிறுநரிகளை யும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத் தோட்டங்கள் பூவும் பிஞ் சுமாயிருக்கிறதே.


என் பழைய வாழ்க்கையில் இருந்த பெரிதான காரியங்கள் யாவை யும் தேவனை அறிகின்ற மேன்மைக்காக விட்டுவிட்டேன் ஆனால் இந்த சிறிய காரியம் மட்டுமே என்னிடம் இருக்கின்றது என்று சில சின்னச்சின்ன காரியங்களை மனிதர்கள் தங்களை விட்டு அகற்றிவிடு வதில்லை அல்லது அவை சிறிய காரியங்கள் தானே என்று பரா முகமாகவிட்டுவிடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, பழைய பாவ பழக்க ங்கள, மாம்ச சுபாவங்கள், தவறான பழைய நண்பர்கள அல்லது உறவுகள் போன்றவை என் வாழ்விற்கு என்ன செய்ய முடியும்? அவை அற்பமான வைகள் என எண்ணி தங்கள் வாழ் விற்குள் அவைகளை (அல்லது அவ ர்களை) அனுமதித்துவிடுகின்றார்கள். ஒரு தோட்டக்காரன் தன் திராட்சை தோட்டத்திலே மிகவும் பிரயாசப்பட்டு உழைத்தான். திராட்சை செடிகள் செழி ப்பாக வளர்ந்து பூவும் பிஞ்சுமாக அழ காக காட்சியளித்திருந்தது. தன் பிரயா சத்தின் பலனை அறுக்கும் நாட்கள் அண்மித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவன் அங்கு வந்து செல் லும் சில சிறு நரிகளை குறித்து அஜாக்கிரதையுள்ளவனாக இருந் தான். செடிகள் வளர்ந்து உயர்ந்துவிட்டன எனவே இந்த சிறிய நரி கள் என்ன செய்யமுடியும் என தன் உள்ளத்திலே சொல்லிக் கொண் டான். அவை உருவத்தில் மிகவும் சிறியவைகள், ஆனால் அவைக ளோ அந்த தோட்டத்திலுள்ள திராட்சை செடிகளின் அடித் தண்டு களை கடித்து காயப்படுத்திவிட்டு சென்றன. அதன் விளைவுகள் உட னடியாக தெரிய வில்லை, பிஞ்சுகள் உதிர்ந்து விழ ஆரம்பித்தன, இலைகள் காய்ந்து, படிப்படியாக செடிகள் உலர்ந்து போய்விட்டது. பிரியமானவர்களே, எங்கள் பிரயாசத்தின் பலனை முழுமையாக காண முடியாதிருக்கின்றபடி எங்கள் வாழ்க்கையிலிருக்கும் சிறிய காரியங் களை என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாக் காவ லோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். எனவே, உங் கள் பிரயாசத்தின் பலனை கெடுத்துப்போடக்கூடிய காரியங்கள் யாவை யையும் உங்களை விட்டு அகற்றிவிடத் தீர்மானம் எடுங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, என் பிராயசத்தின் பலனை கெடு க்கும் காரியங்கள் யாவையையும் என்னைவிட்டு அகற்றிவிடும்படி யாக எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:9