புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2019)

தேவனுடைய ஊழியர்கள்

1 தெச 5:13

அவர்களுடைய கிரியை யினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண் ணிக்கொள்ளும்படி உங் களை வேண்டிக்கொள் ளுகிறோம்.


உங்களுக்கு உணவூட்டும் கரங்களை காயப்படுத்தாதிருங்கள் என்று பொருட்படும்படியாய் ஆங்கிலத்திலே ஒரு பழ மொழி உண்டு. தேவன் மனித குலத்தின் மேல் கொண்ட அன்பினால், அவர்கள் நித்திய நரகத்திலே அழிந்து போகாமல் இருக்கும்படிக்கு இரட்சகரை அனுப்பினார். இரட்சகராகிய இயேசு, இரட்சிப்படையும் வழியை உண்டு பண்ணி, பரலோகம் சென்ற பின்பு, அந்த இரட்சிப்பின் நற்செய்தியை (சுவிசே~த்தை) யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தம்முடைய ஊழியர்களை ஏற்படுத்தி அனுப்பிக் கொண்டே இருக்கின்றார். மனிதர்கள் யாவரும் நன்மை அடைய வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார். எடுத்துக் காட்டாக, ஒரு மனிதன் சுக தேகியாக வாழவேண்டும் என்ற நோக் குடன், அவன் எப்படியான ஆகார த்தை உண்ண வேண்டும், என்று சொல்லிக் கொடுக்கும் வைத்தியரை அந்த மனிதன் அசட்டை செய்து, அவரை துன்பப்படுத்துவானாக இருந்தால், அந்த மனிதனுடைய முடிவு பரிதவிக்கப்படத்தக்கது. அதே போல இந்த உலகத்திலே வாழும் போது, அந்த வாழ்க்கையின் நோக்கத்தை உணர்ந்து, அழிந்து போகின்ற இந்த உலக இன்பங்களு க்காக வாழ்வை அழித்துக் கொள்ளாமல், பரலோகத்திலே நித்திய வாழ்வை கண்டடையும் வழியை அறிவிக்கும் தேவ தாசர்களை துன்பப்படுத்துகின்றவர்கள், தங்கள் ஆத்துமாவை குறித்து கரிசனை யற்றிருப்பதால், தங்களுக்கு தாங்களே கேடுண்டாகும்படியாக அப்ப டிச் செய்கின்றார்கள். இவ்வண்ணமாகவே, தேவனை அறிந்த பிள்ளை களும் தேவ வார்த்தைகளைக் கேட்கும் போது அதைக் குறித்து எச்சரி க்கையாக இருக்க வேண்டும். உணவூட்டும் கரங்களை கடிக்கும் அடங்காத பிள்ளைகளை போன்ற மனநிலையுடையவர்களாக இருக்க க்கூடாது. உங்களுக்காக பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர் களை நீங்கள் மதிக்க வேண்டும். அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக் கொள்ள வேண்டும். தேவனுடைய ஒழுங்கிற்கு எதிர்த்து நிற்காதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள். பொறுமையுடன் தொடர்ந்து ஓடுங்கள்.

ஜெபம்:

நீதியின் தேவனே, உம்முடைய வார்த்தைகளை கொண்டு வரும் தாசர்களை கனத்துடன் ஏற்றுக் கொண்டு, அந்த வார்த்தைகளி ன்படி என் வாழ்வை நான் மாற்றிக் கொள்ள உணர்வுள்ள இருதயத் தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 9:41