புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2019)

அன்பில் நிலைத்திருங்கள்

1 யோவான் 2:10

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளி யிலே நிலைகொண்டிரு க்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.


ஒரு மரத்தின் கனியின் சுவை நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்க கூடுமோ? நாங்கள் தேவன் மேல் கொண்டிருக்கும் அன்பும், உடன் சகோதரர் மேல் கொண்டிருக்கும் அன்பும், நாங்கள் பிறர்மேல் கொண்டி ருக்கும் அன்பும், சூழ்நிலைகளின் அடிப்படையில் மாற்றமடைந்து போகும் என்றால், அந்த அன்பு இந்த பூமிக்குரிய அன்பாக இருக் கும். கர்த்தருக்கு பிரியமான சீ~னா கிய யோவான் என்பவர், தெய்வீக அன்பின் முக்கியத்துவத்தை மிகவும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். “பிரி யமானவர்களே, ஒருவரிலொருவர் அன் பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்பு ள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லா தவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்ட தி ல்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக் குள் நிலைத்திருக்கிறார்;”. நேற்று என்னுடைய மனநிலை சரியி ல்லை எனவே நான் என்னுடைய உணர்வுகளின்படி மற்றவர்களுடன் பேசிக் கொண்;டேன். இன்று என்னுடைய மனோநிலை நன்றாக இருக் கின்றது எனவே நான் இனிமையாக பேசிக் கொள்ளுவேன் என்று நாங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைவது தெய்வீக அன்பு அல்ல. முட் செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்தி ப்பழங்க ளையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிக ளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நேற்று அன்புள்ள நண்பனாக இருந்த ஒருவன் இன்று பகைஞனாக மாறிவிடலாம். மாறிப்போனவன் பகைஞனாகவே இருப்பேன் என்று தன் இருதயத்திலே கசப்பை வளர்ப்பானாக இருந்தால், தேவ அன்பு அவனிடத்தில் இருக்காது, அங்கே தேவன் நிலைத்திருக்கமாட்டார். எனவே அந்த இருதயத்திலே தேவ சமாதானத்திற்கு இடமில்லை. மற்றவன் பகைஞனாக மாறிவிட்டதால் என்னுடைய சுபாவமும் மாறி விடக்கூடாது. நான் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போல இருக்க வேண்டும். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருந்து, அதைத் தியானியுங்கள், வாஞ்சியுங்கள், தேவன் அன்பில் பெருகச் செய்வார்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, பரலோகத்திலிருந்து வரும் நிறை வான அன்பில் நான் நாளுக்கு நாள் வளர்ந்து நிலையான சுவையான கனியை கொடுக்கும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:16-20