புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 02, 2019)

அவர் சமுகம் பேரின்பம்

சங்கீதம் 84:1

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமான வைகள்!.


தேவன் தாமே தம்முடைய இருதயத்திற்கு பிரியமானவன் என்று அழைத்த தாவீது ராஜா, தான் தேவன் பேரில் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பல சங்கீதங்களை எழுதியிருக்கின்றார். இவர் தன் தகப்பனின் வீட்டில் இளையவனாக இருந்தார். தன் தகப்பனு க்கிருந்த கொஞ்ச ஆடுகளை மேய்த்து வந்தார். பின்பு இவரை, தேவன் தாமே இஸ்ரவேல் முழுவதற் கும் ராஜாவாக உயர்த்தினார். இந்த உலகத்திலே மனிதன் தன் மாம்சத் திலே அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் யாவையும் இவருக்கு தாராளமாக இருந்தும், “உம்முடைய சமுகத்தில் பரி பூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” என்று தேவனுடைய சமுகத் தையே நாடித் தேடினார். தான் தேவன் பேரில் கொண்ட நேசம் எவ்வளவு பெரியதும் ஆழமுமானது என்று வெளிப்படு த்தும்படிக்கு பல ஒப்பனையான காரியங்களைக் கூறியுள்ளார். “மானானது நீரோ டைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீ ரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, சுவையான உணவை உண்டு திருப்தியாவது போல என் ஆத்துமா உம்மில் திருப்பதியாகின்றது, என் படுக்கையிலும் உம்மை நினைத்து இரா சாமங்களிலே தியானம் செய்வேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயி ருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.” இப்படியாக தேவன்மேல் கொண்டுள்ள நேசத்தையும், அதனால் உண்டாகும் இதய வாஞ்சை யையும், ஆனந்தத்தையும் பேரின்பத்தையும் திருப்த்தியையும் குறித்து தாவீது ராஜா பல சங்கீதங்களை பாடியிருக்கின்றார். இந்த சரீரம் இந்த பூமியோடு ஒழிந்து போகும் ஆனால் ஆத்துமா தேவனுடைய வீட்டிலே நித்திய பேரின்பத்தை அடையும். அந்த பேரின்பமானது நிக ரில்லாதது. இந்த உலகத்திலுள்ள எந்த உறவினாலும் உண்டாகும் இன்பத்தையும் விட மேன்மையானது.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பரம தகப்பனே, உம்முடைய சமுகத்திலே வாசம் செய்யும் பேரின்பத்தை நான் வாஞ்சித்து அதையே நாடித் தேட த்தக்கதாக உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:1-6

Category Tags: