புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2019)

ஒருமைப்பாட்டில் தேறினவர்கள்

பிலிப்பியர் 2:3

ஒன்றையும் வாதினாலா வது வீண்பெருமையி னாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மை யானவர்களாக எண்ண க்கடவீர்கள்.


இந்த பூமியிலே மனிதர்கள் மத்தியிலே பலதரப்பட்ட பாகுபாடுகளும், கருத்து முரண்பாடுகளும் உண்டு. அரசியல் மட்டங்களிலே பல கட்சிகளும் அவை ஒவ்வொன்றிற்கும் அதன் அதன் கொள்கைகளும் உண்டு. இப்படியாக வீட்டுக்கு வீடு, பட்டணத்திற்கு பட்டணம், நாட் டிற்கு நாடு என்று வேறுபாடுகள் உண்டு. ஆனால் உன்னதமான தேவ னுடைய பிள்iளாகும்படி அழைக்கப் பட்ட நாங்கள் கிறிஸ்துவிலே ஒரே சரீர மாய் சிரு~;டிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த ஒருமைப்பாட்டிலே முற்றி லும் தேறினவர்களாகும்படி நாளுக்கு நாள் எங்கள் உள்ளான மனிதன் புதி தாக்கப்பட வேண்டும். அந்த வளர்ச் சியை ஒரு நாளில் அடையமுடியாது. விசுவாசிகள் கூடி வரும் இடங்களிலே அசௌகரியங்கள் உண்டாகுவதுண்டு. இவ்வண்ணமாக ஆதி திருச்சபையிலே, சீ~ர்கள் பெருகினபோது, கிரேக்கரா னவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறு முறுத்தார்கள். அப்பொழுது பன்னிரு சீஷர்களும் ஒன்றுகூடி பந்தி விசாரணைக்காக ஏழுபேரை தெரிவு செய்து, அங்கிருந்த பிரச்ச னையை தீர்த்து வைத்தார்கள். இப்படியாக எங்கள் மத்தியிலே உண் டாகும் சிறிய பிரச்சனைகளையும் நாங்கள் ஒவ்வொருவரும், கிறி ஸ்துவின் பிரமாணமாகிய அன்பை மையமாக வைத்து, தீர்த்து வைக்க வேண்டும். இசைந்த ஆத்துமாக்களாக நாங்கள் கிறிஸ்துவைப் பற்றும் ஏக சிந்தையுள்ளவர்களாக வாழவேண்டும். உன்னதமானவரு டைய பிள்ளைகளாகும்படி அழைக்கப்பட்ட எங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, நாங்கள் தீர்த்து வைக்க முடியாவிடின், தேவனை அறியாத அதிகாரங்கள் மத்தியிலே, வேற்றுமைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? முத லாவதாக, தேவ பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் மத்தியிலே உண் டாகும் பிரச்சனைகளை தீர்க்கும்படி, சமாதானத்தை உண்டாக்கும் கிறி ஸ்துவின் ஸ்தானதிபதிகள் என்ற மனநிலை உடையவர்களாக வேண்டும்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, உம்முடைய வீடு கலகவீடு அல்ல. உம்முடைய வீட்டில் ஐக்கியமும் சமாதானமும் தங்கும் என்ற உண்மையை உணர்ந்து வாழ என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 6:1-4