புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2019)

இருதயத்தின் நினைவுகள்

சங்கீதம் 19:14

என் வாயின் வார்த்தை களும், என் இருதயத் தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.


யார் என்னைப்பற்றி இப்படியாக கூறியிருப்பார்கள்? காரியம் இப்ப டியாக நடந்திருக்குமோ? இந்த மனிதர், என்னை அங்கே கண்டார், எனவே அவர்தான் போய் என்னைப் பற்றிக் கோள் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அந்த மனிதன் தான் நிச்சயமாக இதை செய்திருப்பார் என்று, எந்த ஆதாரங்களும் இல்லாமல் மனிதர்கள் தங்கள் ஊகங்களை நிதர்சனமாக்க முயற்சி செய்வதுண்டு. இப்படிப்பட்ட சந்தேகங்கள் யாவும் பாரபட்சமானவைகள். இரு தயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் எங்கள் நினைவுகளை அறிந்திருக்கின்றார். ஒரு சகோதரனையோ சகோதரியைக் குறித்தோ, சந்தேகத்தினால் உண் டாகும் தவறான அபிப்பிராயம் எங்கள் மனதில் தோன்றும் போது, அவைகளை தேவனுடைய பாதத்திலே ஜெப த்திலே வைத்துவிடுவது நல்லது. மாறாக, அதை விட்டுவிடாமல், அதைக் குறித்து ஆழமாக யோசித்து, மற்றவனை எங்கள் உள்ளத் திலே குற்றப்படுத்தும் போது, அதனால் மற்றவர்களை நியாயந்தீர்க் கின்றவர்களாக மாறிவிடுவோம். கசப்பான வேர் உள்ளத்திலே முளைத்தெழும்ப இடங் கொடுக்கின்றவர்களாக மாறிவிடுவோம். இப்படி செய்வோமாக இருந்தால், நாளடைவிலே நாங்களே எங்கள் சமாதானத்தை குலைத்துப் போடுகின்றவர்களாக இருப்போம். மற்றவர்களோடு பேசி தீர்க்கக் கூடிய காரியங்களை சரியான சந்தர்ப்பத்திலே தயவாக பேசி எங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க கூடுமானால் அப்படியே செய்யுங்கள். அப்படி செய்ய முடியாத விடத்து, ஒன்றை யும் குறித்து கவலை கொள்ளாமல், கர்த்தரிடத்திலே யாவையும் ஒப்புவியுங்கள். கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லா ப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். நியாயப்பிரமா ணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக் கவும் வல்லவர். எனவே மற்றவர்களை குறித்த சந்தேகங்களை விட் டுவிட வேண்டும். சந்தேகம் தெய்வீக சுபாவம் அல்ல. அது மாம்சத்தி ற்குரிய சுபாவம். எங்கள் வாயின் வார்த்தைகள் மட்டுமல்ல, இருதயத்தின் தியானங்களும் தேவனுடைய சமுகத்திலே அவருக்கு பிரியமானதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, சந்தேகங்களினால் உண்டான கசப்பை நான் என் இருதயத்திலே வளர்த்து கொள்ளாமல் இருக்கும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 5:9-11