புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 22, 2019)

பரமபிதா மகிமைப்படும்படிக்கு...

மத்தேயு 5:16

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளை க்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


காலை எழுந்ததும், அந்த நாளுக்குரிய ஆயத்தங்கள், கடமைகள், பொறுப்புக்கள் யாவையும் அவசரவசரமாக செய்து முடித்;துவிட்டு அந்த நாளுக்குரிய அலுவல்களில் விரைந்து செல்லும்படியாக மனித ர்கள் செயற்படுவதுண்டு. அந்த நாளுக்குரிய, இன்னும் அதி விசேஷமான காரியங்களும் உண்டு. சிலர் ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்றும், வேறு சிலர் வேலை மற்றும் வெளி அலுவல்கள் உண்டு என்றும் இன்னும் சிலர் தங்கள் இருதயத்திற்கு பிடித்த பொழுது போக்குகள் அந்நா ளிலே உண்டு என்றும் அந் நாளுக்கு ரிய அட்டவணைகளை போட்டுக் கொள் கின்றார்கள். தாங்கள் போட்டுக் கொள் ளும் அட்டவணைக்குள் தேவனையும் உட்புகுத்தி விடுவார்கள். காலை எழுந் ததும் இறை வணக்கம். வேதத்தை வாசித்து, ஜெபித்து விட்டேன். அந்தக் கடன் முடிந்து விட்டது என்று தேவ னை எங்கள் வாழ்வின், ஒரு நாளின் ஒரு பகுதிக்கு தள்ளிவிடக் கூடாது. எங்கள் அட்டவணையில் தேவனை உட்புகுத்தாமல், தேவனுடைய அட்டவணைக்குள் எங்கள் வாழ்வு அடங்கி இருக்க வேண்டும். அப்படியானால், எங்கள் நாளாந்த அலுவல்களை செய்யாமல் நாள் முழுவதும் ஒரு இடத்தில் இருந்து நாங்கள் வேதம் வாசித்து ஜெபி த்துக் கொண்டிக்க வேண்டுமா? கருப்பொருள் அதுவல்ல. அப்படியாக மாதத்தில் ஒரு நாளையாவது நியமித்து, தேவனுடைய பாதத்தில் தரித்திருப்பது நல்லது. தேவனுடைய பாதத்தில் இருந்து நேரம் செலவிடுவதை ஒரு கடனாக எண்ணக் கூடாது. அந்த விடயம் எங்கள் சுவாசம் போல எங்கள் இயல்பான காரியமாகவும், நாங்கள் ரசித்து ருசித்து செய்யும் காரியமாகவும் இருக்க வேண்டும். தினமும் எங்கள் நாளாந்த அலுவல்களுக்கு கடந்து செல்லும் போது, அவை ஒவ்வொ ன்றும் தேவனுக்கு ஏற்புடையதாகவும், அவருடைய வார்த்தையின்படி யேயும் செய்யப்பட வேண்டும். உதாரணமாக, நாங்கள் வேலைக்கு செல்லும் போது, மற்றவர்கள் எங்;களுடைய நன்நடக்கையையும் மாதிரியான வாழ்க்கை யையும் கண்டு இந்த நபர், உண்மையிலேயே ஒரு கிறஸ்தவன், இவர் விசேஷித்தவர் என்று கூறும்படியாக எங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் மனப்பூர்வமாக உம்மை சேவிக்கவும், ஆர்வத்துடன் உம்முடைய சமுகத்தை நாடவும், என் வாழ்க்கையை உம் சித்தம் போல வாழவும் என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவா 1:5-7