புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2019)

வார்த்தையின்படி வாழுங்கள்

கலாத்தியர் 6:7

மனுஷன் எதை விதை க்கிறானோ அதையே அறுப்பான்.


வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் தேவனுடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை. அவருடைய வார்த்தையின் வழியாக மனி தர்கள் நித்திய ஜீவனை கண்டடைவார்கள். அவருடைய வார்த்தை களை அசட்டை செய்து வாழ்பவர்கள், அவருடைய வார்த்தையினால் நியாயந்தீர்க்கப்படுவார்கள். தேவ வார்த்தை ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கின்றது. விதையா கிய தேவ வார்த்தையை தன் இருதய த்திலே காத்துக் கொள்பவன் தேவனு க்குள் பயபக்தியோடு தன் வாழ்வை காத்துக் கொள்வான். ஆதலால் தேவ வார்த்தைக்குள் அடங்கி இருக்கும் தெய்வீக ஞானம் அவன் இருதய த்தில் இருக்கும். அந்த வார்த்தையா னது அவன் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிரு க்கும். அவன் தன் வாழ்வில் இடறிப் போவதில்லை. “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கி யவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனு~ன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.” ஆனால் தேவ வார்த்தையைக் கேட்டும் அதை அசட்டை செய்து தங்கள் கண்போன வழியிலே வாழ் பவர்கள், மெய் ஞானத்தை வெறுப்பதால், தங்கள் வாழ்விலே பல பிழையான தீர்மானங்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். பிரி யமானவர்களே, மனிதன் எதை விதைக்கின்றானோ அதை அறுப் பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நற்கிரியைகளை நடப்பிப்பதிலே சோர்ந்து போகாதிருங்கள். கிறிஸ்து வெளிப்படும் நாளிலே பெரிதான பலனை அறுவடை செய்வீர்கள். தேவனுக்கு பயந்து பயபக்தியோடு அவர் அருளியிருக்கும் வார்த்தைகளின் வழியிலே வாழுங்கள். அந்த வார்த்தையிலே தேவன் அருளி இருக்கும் மெய்ஞானம் அடங்கியிருக் கின்றது.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல், எப்போதும் உம்முடைய வார்த்தையின்படி நற்கிரியைகளை நடப்பித்து வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 128:1-6