புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2019)

இருதயத்தை ஸ்திரப்படுத்துங்கள்

யாக்கோபு 5:8

நீங்களும் நீடிய பொறு மையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப் படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கி றதே.


ஒரு எஜமானனானவன், தன்னுடைய தொழிற்சாலையிலே வேலை பார் க்கும் ஊழியர்களுக்கு முன்குறித்த கூலியை வழங்காமல் பல சாட்டுப் போக்குகளை சொல்லி வந்தான். இந்த எஜமானன், தன் வாழ்வில் நீதியை கடைப்பிடிப்பதின் மேன்மையயை உணராமல், அழிந்து போகும் அற்பமான, இந்த உலக ஐசுவரியத்தை தன் வாழ்வில் மேன் மைப்படுத்துகிறவனாய் இருக்கின்றான். தான் செய்வது அநியாயம் என்ற உண ர்வு அவன் இருதயத்திலே அற்றுப் போய்விட்டதால், தன் ஊழியர்களின் வாழ்க்கையையும் அவர்களின் குடு ம்பங்களையும் அற்பமாக எண்ணுகின் றான். இவன் பொருளாசையாகிய, விக்கிரக ஆராதனை உடையவனாக இருப்பதால், இந்த உலக ஐசுவரிய த்தை தனக்கு தெய்வமாக்கிக் கொள் கின்றான். பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் உலக எஜமான்களால் அநியாயமாக நடத்தப்பட்டாலும், உங் கள் சாரத்தை இழந்து போய்விடாதிருங்கள். “என்னுடைய உலக எஜ மானனாவன் அநீதியுள்ளவன் ஆகவே நான் அவனிடத்தில் அர்ப் பணிப்போடு வேலை பார்க்க வேண்டியதில்லை” என்ற எண்ணத்திற்கு இடங்கொடாதிருங்கள். எங்களுடைய குடியிருப்பு பரலோகம். எங்க ளுடைய வாழ்வின் எஜமானான் இயேசு கிறிஸ்து. எனவே, எங்க ளுடைய பொக்கி~ம் இந்த பூலோகத்திற்குரியதல்ல. எனவே உங்கள் நீதி தேவனுடைய நீதியாக இருக்கட்டும். அநியாயம் செய்கின்றவன் தான் ஆக்கினைத்தீர்ப்பு அடையும்படியாய் தனக்கு கண்ணியை உண்டுபண்ணுகின்றான். தேவ நீதியை தன் வாழ்வில் கைக்கொள்கி ன்றவன், தேவனுடைய ராஜ்யத்தின் பங்காளியாக இருக்கின்றான். இருள் நிறைந்த உலகிலே பிரகாசிக்கின்ற தீபங்களாக ஏற்படுத்தப் பட்டிருக்கின்றான். எனவே வெளிச்சத்தின் பிள்ளைகளாகவே எப்போ தும் நடந்து கொள்ளுங்கள். கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையா யிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவே ண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமை யோடேகாத்திருக்கிறான். நியாயம் செய்வதை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளாமல், தேவ நீதி வெளிப்படும் நாள்வரைக்கும் உங் கள் ஒளி இந்த உலகத்தை பிரகாசிப்பிக்கட்டும்.

ஜெபம்:

சகலத்தையும் ஆளும் பரலோக தேவனே, இந்த உலகத்தின் போக்கின்படி நான் வாழாமல், பொறுமையோடு தேவ நீதி வெளி ப்படும்வரை காத்திருக்க என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:10