புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2019)

விலையேறப் பெற்றவர்கள்

1 பேதுரு 2:9

தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீக மான ஆசாரியக்கூட்ட மாயும், பரிசுத்த ஜாதி யாயும், அவருக்குச் சொந் தமான ஜனமாயும் இரு க்கிறீர்கள்.


இந்த உலகிலே மனிதர்கள் பல தரப்பட்ட உத்தியோகங்களை செய்து வருகின்றார்கள். சிலர் அரசாங்க உத்தியோகத்திலும், வேறு சிலர் தனி யார் ஸ்தாபனங்களிலும் பணிபுரிந்து வருகின்றார்கள். இப்படியாக மனி தன் பிழைப்புக்காக பல தொழில்களை செய்து வருகின்றான். அந்த தொழில்களினாலே பலர் நன்மையடை கின்றார்கள். எடுத்துக் காட்டாக, நாடுக ளிலே, அரசாங்கத்தினாலே, பெருந்தெ ருக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அங்குள்ள ஜனங்கள் யாவ ரும் நன்மையடைகின்றார்கள். தேவ ஊழியங்களை முன்னெடுத்துச் செல்வ தற்கும் இந்த உலகிலுள்ள போக்குவர த்து சாதனங்களை உபயோகிக்கின் றோம். இப்படியாக ஆசிரியர்கள், கல்வி யை கற்று கொடுக்கின்றார்கள், மருத் துவ சேவை, பாதுகாப்பு சேவை போன்ற பலதரப்பட்ட சேவைகளால் நன்மைய டைக்கின்றோம். இன்னும் பல தாய்மார் வீடுகளிலே தரித்திருந்து தங் கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து வருகின்றார்கள். இவை யாவற்றிலும் நான் யார்? என்னுடைய பதவி என்ன? ஒரு வேளை என்னுடைய பதவி மனிதர்கள் பார்வையிலே அற்பமாக எண்ணப்பட லாம். அல்லது நான் செய்யும் வேலை அற்பமானது, நான் இல்லாவி ட்டால் என்னுடைய வேலையை செய்வதற்கு ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், தேவனுடைய பார்வையிலே நீங்கள் விலையேறப்பெற்றவர்கள். நானும், நீங்களும், மற்ற யாவரும், கெட்டுப்போகாமல் முடிவில்லா வாழ்வை அடையும்படிக்கு எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை பிதாவாகிய தேவன்தாமே எங்களுக்காக தந்;திருக்கின்றார். நாங்கள் கணக்கு ஒப்பு விக்கப்படும் நாளிலே, அவரவருக்கு கொடுத்த அளவின்படியே கேட்க ப்படும். தேவன் உங்களுக்கு கொடுத்த பொறுப்பு, ஒரு வேளை மற்ற வர்கள் பார்வையிலே அற்பமாயிருக்கலாம், ஆனால் உங்களை தெரி ந்து கொண்டவர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். தம்முடைய சொந்த ஜனமாக, தம்முடைய துதியை சொல்லி வரும் ராஜரீக ஆசாரிய கூட்டமாக எம்மை வேறு பிரித்திருக் கின்றார்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நீர் எனக்குத் தந்த பொறுப்பு எவ்வளவு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தாலும், அதை மகிழ்வோடு நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 14:12