புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2019)

விசுவாசத்தின் பரீட்சை

யாக்கோபு 1:3

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறு மையை உண்டாக்குமெ ன்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.


மனிதர்கள் எதிர்பார்த்திருந்த காரியம், அவர்களுடைய மனவிருப்பத்தி ன்படி நிறைவேறாமல் போகுமிடத்து விரக்தியடைந்து விடுகின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை பலரும் பலவிதமாக கையாளுகின்றார் கள். பல வழிகளிலே தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டுகின்றா ர்கள். நாங்கள் நினைத்த காரியம் வாய்க்காமல் போகும் போது, நாங்களும் மனவேதனையடைகின்றோம். அந்த வேளைகளிலே நாங் கள் எங்கள் விசுவாசத்திற்கு எதிரான வார்த்தைகளை அறிக்கையிடக்கூடாது. சிலர் தங்கள், இக்கட்டான சூழ்நிலை களிலே, விரக்தியை வெளிக்காட்டும்ப டிக்கு, வேத வார்த்தைகளுக்கு முர ணான காரியங்களையும், வேண்டாம் என்று தள்ளிவிட்ட பழைய வாழ்க் கையின் காரியங்களையும் செய்துவிடு கின்றார்கள். அந்த காரியங்கள், ஆரம் பத்திலே சின்ன வி~யமாக தோன்ற லாம், ஆனால் அப்படியான வழிமு றைகளுக்கு எங்களை நாங்கள் பழக்கிக்கொள்ளும் போது, ‘நான் என்னும் பெருமை’ எங்களுக்குள் தலைதூக்கிவிடும். நான் சொல் லும்படி அல்லது நினைத்தபடி காரியங்கள் நடைபெற வேண்டும் என் னும் அகங்காரம் எங்களில் வளர ஆரம்பிக்கும். எல்லாவற்றையும் விட சுயகௌரவமே முக்கியமானது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவி டுவோம். இப்படியாக, இயேசுவோடு இருந்த யூதாஸ் காரியோத்தும், தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேலும், தாங்கள் நினைத்தபடி காரியங்கள் கைகூடாமல் போன போது, அதை தாங்கிக் கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். இப்படிப்பட்ட முடிவுகளை மனிதர்கள் ஒரு நாளில் எடுப்பதில்லை. பல ஆண்டுக ளாக, இவர்களாகவே வளர்த்து வந்த பாவ இச்சைகள் இவர்க ளுக்கு கண்ணியாக மாறியது. எங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறு மையை உண்டாக்கும்படி தேவனில் சார்ந்திருக்க வேண்டும். ‘இச்சை யினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்து க்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையு மான வாக்குத்தத்தங்கள்; அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிரு க்கிறது.’ எனவே பொறுமையோடு ஜெபத்திலே தரித்திருந்து தேவனு டைய வாக்குத்தத்தங்களை அறிக்கையிடுங்கள்.

ஜெபம்:

நீடியபொறுமையுள்ள தேவனே, உம்முடைய திவ்விய சுபாவத் திற்கு பங்காளியாக நான் மாறும் பொருட்டு, பொறுமையுடன் உம்முடைய சித்தம் நிறைவேற காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேது 1:5-7