புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2019)

நன்மையான ஈவுகள்

யாக்கோபு 1:17

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினி டத்திலிருந்து இறங்கிவ ருகிறது.


கர்த்தராகிய இயேசு, தம்முடைய சீஷனாகிய சீமோன் பேதுருவை நோக்கி: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். அந்த பிரகாரமாய், சீமோன் பேதுரு பெரிதான சோதனைக்குள் உட்படுத்த ப்பட்டான், கர்த்தர் அவன் அழிந்து போகாமல் காத்துக் கொண்;டார். இதே போல, யோபு என்னும் பக்தனின் வாழ்விலும் சாத்தானானவன், அவனை சோதிக்கும்படியாய் உத்தரவு பெற்றுக் கொண்டான். எனினும் அவனையும் கர் த்தர் காத்துக் கொண்டார். எங்களு டைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் அனுமதிக்கப்பட்டால், கர் த்தர் எங்களோடு இருந்து எங்களை காத்து வழிநடத்துவார். சீமோன் பேதுரு, யோபு என்னும் பக்தர்களின் இருதயத்திலே, சோதனை வேளைகளிலும் பாவம் செய்யும் இச்சை இருக்கவில்லை. ஆனால் சில மனிதர்கள், கர்த்தரை அறிந்திருந்தும் பாவம் செய்வதற்கு சந்த ர்ப்பம் தேடித் திரிகின்றார்கள். எப்படியெனில், ஒரு இக்கட்டான சூழ் நிலை எங்கள் வாழ்விலோ அல்லது நாங்கள் நேசிப்பவர்களின் வாழ்விலோ ஏற்படும் போது, பொறுமையாக கர்த்தருடைய பாதத் திலே அமர்ந்திருப்பதற்கு பதிலாக, கர்த்தரை நம்பி இருந்தேனே, இப்படி நடந்து விட்டதே என்று கூறி, இனி என்ன செய்வது? என்று தாங்கள் விட்டு வந்த பழைய பாவ இச்சைகளுக்கு திரும்பி விடு கின்றார்கள். இது கர்த்தரால் உண்டாவதில்லை. கர்த்தர் பாவத்தின் காரணர் அல்ல. அவர் பரிசுத்தர்! கர்த்தர் மனக் குழப்பத்தை ஏற்படு த்துகின்றவர் அல்ல. அவர் சமாதான காரணர். கர்த்தரிடத்தில் தீமை இல்லை! நன்மையான ஈவுகளும், பூரணமான வரங்களும், பரத்திலி ருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. எப்படியான சோதனை வேளையிலும், கர்த்தருடைய பாதத்திலே ஜெபத்திலே தரித்திருந்து ஜெயம் பெறுவோம்.

ஜெபம்:

ஜெயம் தரும் தேவனே, சோதனை வேளைகளிலே, எங்கள் கர்த் தராகிய இயேசுவைப் போல, அவைகளுக்கு இடங்கொடாமல், ஜீவனு ள்ள வார்த்தை வழியாக ஜெபிக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 22:31-32