புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2019)

தேவ சத்தத்தை கேட்போம்

யோவான் 10:5

அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.


சோதனைக் காரனாகிய பிசாசானவன் ஆதிமுதல் வஞ்சிக்கின்றவனாக இருக்கின்றான். திருடனாகிய அவன் திருடவும் கொல்லவும் அழி க்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால் எங்கள் நல்ல மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தத்தை நாங்கள் எப்போதும் கேட்டு, அதற்கு செவி கொடுக்கின்றவர்களாக இருந்தால், நாங்கள் அவனுடைய வஞ்சகத்தில் ஒரு போதும் விழுந்து போகமாட்டோம். மேய்ப்பனாகிய இயேசுவை பின்பற்றும் நல்ல ஆடுகளாகிய அவருடைய பிள் ளைகள், பிசாசானவனின் சத்தத்தை அறியாதபடியினால், அந்த சத்தத்தை கேட்டவுடனே, அந்த ஆடுகள்; அந்நிய னாகிய பிசாசுக்கு பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். ஆனால், நல்ல மேய்ப்பனாகிய இயே சுவின் சத்தத்திற்கு கீழ்ப்படியாமல், அந் நிய சத்தத்தைக் கேட்க எங்கள் மனதை சாய்ப்போமாக இருந்தால், பிசாசின் வஞ்சகமான வார்த்தைகளினால் இழுப்புண்டு போய்விடுவோம். கர்த்-தர் ஒரு காரியத்தை செய்யாதே அல்லது தொடாதே, அல்லது பார் க்காதே அல்லது கேட்காதே என்று கூறியிருந்தால். அதற்கு பின் அங்கே வேறு பேச்சுக்கு இடம் இருக்கக் கூடாது. ஆதியிலே ஏவாள் வஞ்சகனின் சத்தத்தைக் கேட்டு, அவனைவிட்டு ஓடிப்போகாமல், அவ னோடு பேச ஆரம்பித்ததால் அவள் வஞ்சிக்கப்பட்டாள். ஆகவே, எங்களுக்கு வரும் எல்லா சோதனைகளும் தேவனிடத்திலிருந்து வருவ தில்லை. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படு கிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, பொல்லாங்கினால் ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக் கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்ப ந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரண த்தைப் பிறப்பிக்கும் என வேதம் கூறுகின்றது. எனவே, சோதனைக்கு ட்படாதபடி விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள். அந்நிய சத்தத்தை ஒரு முறை கேட்டுப் பார்ப்பேன், என்று சமரசம் செய்து, கர்த்தரு டைய ஆலோசனையைத் தள்ளி, அவரைவிட்டு விலகிப் போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நான் எப்போதும் உம்முடைய சத்தத்திற்கு செவி கொடுத்து, உம்முடைய தூய வழியிலே நான் வாழும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 26:41