புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2019)

பரிசுத்தப்படுத்தும் தேவன்

1 கொரிந்தியர் 10:13

உங்கள் திராணிக்கு மே லாக நீங்கள் சோதிக்க ப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனை யைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள் ளும் படியான போக்கை யும் உண்டாக்குவார்.


உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம் முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட் டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள் ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக என்று தம்முடைய ஜனங்களுக்கு தேவனாகிய கர்;த்தர் தன்னுடைய தாசனாகிய மோசே வழியாக உரைத்து கூறினார். மனிதர்கள் உள்ளத் தில் என்ன இருக்குமென்பதை தேவன் அறிந்திருக்கின்றார். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாக அழைக் கப்பட்டவர்கள், தங்கள் இருதயத்தில் இருக்கும் தங்கள் வழிகளை உணரா திருக்கின்ற வேளைகளிலே, அவர்கள் தங்களைக் குறித்த மற்றவர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்துவ தில்லை. எங்களை நேசி க்கின்ற எங் கள் நல்ல தந்தையாகிய தேவன் தாமே, நாங்கள் யார் என்றும் எங்கள் உள்ளத்திலே இருப்பது என்னவென் றும் நாங்கள் உணர்ந்து அவரிடம் திரும்பும்படிக்கும் சில சோதனைகளை அனுமதிக்கின்றார். தகப்பனானவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல எங் கள் தேவனாகிய கர்த்தர் எங்களைச் சிட்சிக்கிறார் என்று நாங்கள் எங்கள் இருதயத்தில் அறிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்திலுள்ள நல்ல தகப்பன்மார் தங்கள் பிள் ளைகளை கண்டித்து தண்டித்து சீர்திருத்தும் போது, தங்கள் பிள்ளை கள் நிலை தவறாதபடிக்கு காத்துக் கொள்ளுவதை விட, மிக அதிக திகமாக தம்முடையவர்களை தேவன் நேசிக்கின்றார். தேவன் சோதி க்கும் போது, ஒருபோதும் எங்கள் பெலனுக்கு மிஞ்சின சோதனை யை அனுமதிக்க மாட்டார். தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்கு ள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம் மைச் சிட்சிக்கிறார். அப்படியான சோதனையின் வேளையிலே நாங் கள் தேவனுக்கு கீழ்ப்படிவோமாக இருந்தால், நாங்கள் தேவனுக்குள் பெலனடைந்து, நீதியாகிய சமாதான பலனைக் கண்டடை வோம்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, வேதனை உண்டாக்கும் வழிகள் என் உள்ளத்தில் இருந்தால், அதை எனக்கு தெரியப்படுத்தி, அதை விட்டுவிடத்தக்கதாக என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 8:2