புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2019)

உள்ளான மாற்றங்களின் கனிகள்

எரேமியா 2:21

நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர் குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்;


நீங்கள் நாட்டிய திராட்சை செடியானது, செழிப்பாக வளர்ந்து, படர் ந்து அதன் காலத்தில் தன் கனியைக் கொடுத்தால் எவ்வளவு சந்தோ ~ப்படுவீர்கள்! ஆனால், அப்படி பெரிதாகவும் செழிப்பாகவும் வளர் ந்தும், கொடுக்கப்பட வேண்டிய மூலவளங்கள் யாவும் கொடுக்கப் பட்டும், அந்த செடி பல ஆண்டுகளாக, கனி கொடாமல், இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தால் எவ்வளவு காலம் அதை விட்டுவைப்பீர்கள்? நாங் கள எங்கள் வாழ்க்கையில் கனி கொடு க்கும்படியாய் “உயர்குல” திராட்சை செடியாக கர்த்தர் நாட்டியிருக்கிறார். எங்கள் வாழ்க்கையில் கர்த்தர் விரு ம்பும் தெய்வீக குணாதிசயங்களாகிய நற்கனிகள் வெளிப்பட வேண்டும். நாங் கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பது எதினாலே உறுதிப்படும் என்று சற்று ஆராய்ந்து பார்ப்போம். முதல் பகுதியாக மனிதர்கள் காணக்கூடிய கிரியைகள்: தவறாமல் ஆல யத்திற்கு செல்லுதல், வேதத்தை கற்றுக் கொள்ளுதல், உபவாச ஜெபம் செய்தல், தானதர்மங்களை செய்தல், வெளியரங்கமான தீய பழக்கங்களை விட்டுவிடுதல். இரண்டாவது பகுதியாக: சபிக்கிறவர் களை ஆசீர்வதித்தல், நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் செய்தல், தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்தல். இந்தப் பகுதிகளில் எவை ஒரு கிறிஸ்தவனின் குணாதிசயங்களை வகையறுக்கின்றது? சற்று தரித் திருந்து சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பகுதியும் நாங்கள் கிறிஸ் துவை சார்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும். முதல் பகுதியிலே நாங்கள் கற்றவைகளின் பெறுபேறுகள், இரண்டாவது பகுதியிலுள்ள எங்கள் வாழ்க்கையின் கனி வழியாக உறுதிப்படுத்தப்படும். மனித ர்களுடைய பார்வையில், அவர்களின் அளவுகோல், முதல்ப் பகுதியு டன் நின்றுவிடும். ஆனால், இருதயங்களை ஆராய்ந்தறிகின்றவர், எங் கள் கனிகளை பார்க்கின்றார். நாங்கள் வேதத்தை கற்றுக் கொள் ளுதல் அவசியம், அதைவிட கற்ற வார்த்தைகளுக்கு கீழ்ப்படிதல் இன்றியமையாதது. ஜெபம் இன்றியமையாதது, ஆனால், எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவனை குறித்த கசப்பு மனதில் இருக்கும் என் றால், எப்படி முழுமனதோடு தேவனை ஆராதிக்க முடியும்? எனவே, உள்ளான மாற்றங்களின் கனிகள் எங்களில் வெளிப்படட்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் விரும்பும் நற்கனிகளாகிய திவ்விய சுபாவங்களை என் வாழ்வில் வெளிக்காட்டி வாழும்படிக்காய் நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலா 5:22-23