புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2019)

தேவ ராஜ்யத்தின் நீதி

ஏசாயா 32:17

நீதியின் கிரியை சமாதா னமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.


உலக சட்டபிரமாணத்தின் படி, முன்மாதிரியான நெறிமுறையான வாழ் க்கையை வாழ்வதை “நீதி” என்று மனிதர்கள் கூறிக் கொள்கின்றார் கள். இது மனிதர்களுடைய (சுய) நீதி. தேவனுடைய பார்வையிலே எங்கள் வாழ்க்கை சரியாக இருப்பதே தேவ நீதி. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கின்றது. வேதத்திலே நீதிமா ன்கள் என்று கூறப்படும் பாத்திரங் களை இந்த உலகத்தார் பகைத்தார் கள். துன்புறுத்தினார்கள், பலரைக் கொலை செய்தார்கள். மனிதர்களின் நீதி யின்படி, பாவமறியாத, நீதிபரராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தார் கள். மனித நீதியில் பயமும் கோப மும் இருக்கும். மற்றவர்கள் அநீதி செய்யும் போது, மனிதர்கள் பயப்படு வார்கள், அதற்கு நீதி செய்ய வேண்டும் என்று கோபம் அடை வார்கள். தேவ நீதியிலே விசுவாசமும் நீடிய பொறுமையும் இருக்கும். இந்த உலகத்தால் உண்டாகும் கேட்டினால், தேவ பிள்ளைகள் பத ற்றமடைவதில்லை, மாறாக அவர்கள், தேவன் மேல் கொண்ட விசு வாசத்தினால், வேத வசனம் நிறைவேறும்படி நீடிய பொறுமையுள்ளவ ர்களாக இருப்பார்கள். உலக நீதி சுயநலமுள்ளது, அங்கே பெருமை வாசமாக இருக்கும். தங்கள் கொள்கைகள் நிலைநாட்டப்படும் வரைக் கும் அயராது உழைப்பார்கள். தேவ நீதி சுயநலமற்றது. அங்கே மாய மற்ற தாழ்மை இருக்கும். அங்கே தேவ சித்தம் நிறைவேறும்படி தங் களை மரணபரியந்தம் ஒப்புக் கொடுப்பார்கள். மனித நீதியானது, மனித புகழையும், சமுதாய அங்கீகாரத்தையும் மேன்மைப்படுத்துவதி னால், காலப்போக்கில், பெரும்பான்மையாக மனிதர்களால் விரும்பப் படும் காரியங்கள் அவர்கள் மத்தியிலே நீதியாக எண்ணப்படும். தேவ நீதி, தற்புகழை நாடாமல், மனித பார்வையிலே அற்பமாக எண்ணப்ப ட்டாலும், தேவ அங்கீகாரத்தையே மேன்மைப்படுத்தும். மனித நீதி, தேவனுடைய வார்த்தையை அற்பமாக எண்ணும். தேவ நீதி, தேவ வார் த்தையையே மேன்மைப்படுத்தும். மனித நீதியின் முடிவு நித்திய ஆக் கினை. தேவ நீதியின் முடிவு நித்திய ஜீவன். தேவ நீதியை பின் பற் றுவோரின்; கிரியை சமாதானமும் அதன் கனி அமரிக்கையான வாழ்வு மாகும். தேவ நீதியினிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள். பர லோக ராஜ்யம் அவர்களுடையது என்று இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தேவனே, என் வாழ்வில் முழு நோக்கமும் உம் முடைய ய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுவதாக இருக்கும்படி அதன் மேன்மையை உணர்ந்து கொள்ளும் பாக்கியத்தைத் தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:10