புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2019)

தேவ நீதியும் மனுஷ நீதியும்

ஏசாயா 64:6

எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது


நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பல மனிதர்கள் இன்று பேசி கொள்வதை நாங்கள் நாளாந்தம் கேள்விப்படுகின்றோம். இந்த உலக த்திற்குரிய எந்த ஸ்தாபனமும் மனிதர்களால் நிறைந்திருக்கின்றது. மனிதர்களே, நீதிமன்றங்களில் இருக்கின்றார்கள். மனிதர்களே அர சாங்கங்களில் இருக்கின்றார்கள். மனிதர்கள் வழியாகவே சட்டரீதியாக இயங்கும் ஸ்தாபனங்களும் சட்டத்தி ற்கு முரணாக இயங்கி வரும் ஸ்தாப ங்களும் செயற்பட்டு வருகின்றது. ஆகவே, மனிதர்களின் இருதயத்தில் உண்மையான நீதி இருந்தால், அங்கே அநீதிக்கு இடமிருக்காது. மனிதர்களின் உள்ளத்தில் உண்மையான நீதி இல் லாதிருக்கும் போது, அந்த மனிதர்கள் ஆளும் இடங்களில் அநீதி நிறைந்திருக்கும். இதன் விளைவாகவே நாளுக்கு நாள் புதிய சட்டங்களும், புதிய ஒழுங்கு முறைகளும் பல அதிகாரங்களினால் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. நீதியின் மூல காரணர் பரலோகிலே ஆளுகை செய்வதால், அங்கே அநீதிக்கு இட மில்லை. பரலோகிலே நீதியை நிலைநாட்டும்படி ஒருவரும் கிரியை நடப்பிக்கத் தேவையில்லை. சட்டநூல் அங்கே தேவையில்லை. இதைச் செய்யாதே, அதை செய் என்று யாரும் அங்கே கூறுவதி ல்லை. ஏனெனில் பரலோகத்திலே தேவநீதி இயல்பாகவே நிலைத் திருக்கின்றது. இந்த பூலோகத்திலே, அநீதியின் காரணனாகிய பிசாசானவன் கிரியை செய்வதால், பூவுலகிலே அநீதி நடைபெற்று வருகின்றது. வஞ்சிக்கின்ற பிசாசானவன் தேவநீதிக்கு பதிலீடாக, நீதி என்ற போர்வையிலே, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட “உலக நீதியை” மனிதர்களின் உள்ளத்திலே தூண்டி விடுகின்றான். தேவநீதிக்கு எதிரான காரியங்கள், தேவனுடைய பார்வையிலே அநீதி என்று நிர் ணயிக்கப்பட்ட காரியங்கள், இன்று பல நாடுகளில், நீதியுள்ளது என பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதனால் தேவநீதி அவமாக்கப்படுவதி ல்லை. ஆனால் இவைகளில் சிக்குண்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கை யைப் பாழாக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் தேவநீதியை அறியா மல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக் குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். அவர்களுடைய நீதிகளெல்லாம் அழு க்கான கந்தைபோல இருக்கிறது. எனவே சுய நீதியை பின்பற்றாமல் தேவ நீதியை தேடுவோம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, உம்முடைய நீதி நித்திய நீதி. நீதி என்று எண்ணி, என்னுடைய கொள்கைகளில் தரித்திருந்து, சுய நீதியை நிறைவேற்றாமல், உம்முடைய ராஜ்யத்தின் நீதியை தேட என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 10:3

Category Tags: