புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2019)

தேவ அன்பே மேலானாது

2 பேதுரு 1:7

தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.


போதகர் ஐயா, குற்றச் சாட்டுகள் ஒன்று இரண்டு சாட்சிகளால் நிலைவரப்படும், அந்த மனிதன் உங்களுக்கு எதிராக செய்த குற்றத்திற்கு நாங்கள் யாவரும் சாட்சியாக இருக்கின்றோம். எவ்வளவாய் உங்களை அவமானப்படுத்தினான், வேத வார்த்தையின்படி அவன் விசாரி க்கப்பட்டு, எவர்கள் முன்னிலையில் உங்களை அவன் அவமான ப்படுத்தினானோ, அவர்கள் முன்னினை யில் அவன் மன்னிப்பு கேட்க வேண் டும் என்று ஒரு சிரேஷ்ட உறுப்பினர் போதகரிடம் கூறினார். அந்த வயதான போதகரோ, நீங்கள் கூறுவது சபை ஒழுங்கு முறைகளுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், அவை அனைத்திலும் எங்களை ஆட்கொண்டு நடத்தும் இயேசுவின் அன்பு பெரியது. அந்த மனிதன் செய்தது பிழை, ஆனால் அவன் என்னிடம் வந்து மன்னிப்பைப் பெற்றுக் கொண்டான். நான் பட்ட அவமானத்தின் வேதனையை நான் அறிவேன். நான் சென்ற வேதனைக்குள்ளாக அந்த மனிதனானவன் செல்வதை நான் விரும்பவில்லை. ஒருவரை ஒருவர் அவமானப்படுத்தும்படிக்கல்ல, நேசிக்கும்படிக்கே எங்கள் இயேசு எங்களை ஏற்படுத்தினார் என தயவாய் கூறினார். பிரியமானவர்களே, தேவன் கொடுத்த ஒழுங்கு முறைகள் அன்புடன் கைக்கொள்ள வேண்டியவைகள். சில வேளைகளில் குற்றங்களை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தலைவர்கள் தள்ளப்படுகின்றார்கள். ஆனால், தேவன் கொடுத்த ஒழுங்கு முறைகளை, எங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. உங்கள் சத்துருக்களை நேசியுங்கள் என்று இயேசு கூறினார். அப்படியானால், எங்கள் உடன் சகோதரரை எவ்வளவு அதிகமாக நாங்கள் நேசிக்க வேண்டும். எங்களை அன்பு செய்த இயேசுவானவர், எங்கள் அவமானங்கள் யாவையும் தம்மேல் சுமந்து, பகிரங்கமாய், பரிகாச சின்னமாக சிலுவையில் தொங்கினார். எங்கள் வாழ்விலுள்ள ஒவ்வொரு தவறுதலுக்கும், சட்டத்தை அமுல்ப்படுத்தினால், மனிதர்களில் யார் உயிரோடு இருக்க முடியும்? ஒரு மனிதனும் நிலைநிற்க முடியாது. எனவே, எங்கள் இயேசுவைப் போல, எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பை கூட்டி வழங்குகின்றவர்களாயிருப்போம்.

ஜெபம்:

அன்பும் இரக்கமும் நிறைந்த தேவனே, சட்டத்தை அமுல்படு த்துகின்றோம் என்று கூறி, நீர் எங்கள் மேல் காட்டுகின்ற அன்பை மறந்துவிடாமல், மற்றவர்களை அன்பு செய்ய என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 13:34

Category Tags: