புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2019)

எல்லாம் கிருபையே

1 கொரிந்தியர் 15:10

ஆகிலும் நான் இருக்கி றது தேவகிருபையினா லே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலு ம் நான் அதிகமாய்ப் பிர யாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபை யே அப்படிச் செய்தது.


நிறைவான வாழ்க்கை வாழும் குடும்பத்தவர்கள், பல பிரச்சனை களோடு இருக்கும் சக விசுவாசிகளை காணும் போது ஏன்; இப்படி செய்கின்றீர்களென்று சில புத்திமதிகளை கூறிக் கொள்வார்கள். வேறு சிலர், இவர்கள் ஏதோ பாவம் செய்கின்றார்கள் என பேசிக் கொள் வார்கள், இன்னும் சிலர், அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களு க்காக ஜெபிக்க வேண்டும் என்று சொல் லிக் கொள்வார்கள். நாங்கள் பல நெரு க்கடிகளோடு வாழ்ந்து வரும் சக விசு வாசிகளை கண்டால் என்ன சொல்லு வோம்? சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று என் வாழ்க்கை சுமுகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது என்றும் என் னுடைய வாழ்க்கையில் ஒழுக்கம் இருக்கின்றது. சோம்பல்தனமில்லாமல் கடுமையாக பிரயாசப்பட்டு வருகின் றேன், தினமும் வேத த்தை வாசித்து ஜெபித்து வருவதில் தவறுவதில்லை, என்னுடைய குடும்பத்தினர் யாவரோ டும் ஒற்றுமையாக ஆலயம் சென்று வருகின்றேன். பிள்ளைகள் படிக்கும் படி ஊக்குவித்து உதவி செய்கின் றேன்;. நல்ல வேலை பார்க்கின்றேன். இப்படியாக நாம்சொல்லிக் கொள்ள லாம். பிரியமானவர்களே, இப்படி உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக ஓடிக் கொண்டிருந்தால், அதைக் குறித்து மேன்மை பாராட்ட எங்க ளுக்கு இடமில்லை. தேவ கிருபையினாலே இவை யாவும் கொடுக்க ப்பட்டிருக்கின்றது. நற்கிரியைகளை செய்வதற்குரிய எண்ணத்தையும், அதன் ஆற்றலையும் தேவனே உங்களுக்கு அனுக்கிரகம் செய்கின் றார். நான் நிற்பதும் நிர்மூலமாகதிருப்பதும் தேவனுடைய சுத்த கிருபை. இந்தக் கண்களினூடாகவே நாங்கள் மற்றவர்கள் யாவரை யும் பார்க்க வேண்டும். தேவ ஊழியராகிய பவுலின் வாழ்க்கையிலே தேவ கிருபை கொடுக்கப்பட்டது. அந்த கிருபை அநியாயமாக போகா தபடிக்கு அவர் அதிகமாக பிரயாசப்பட்டார். அவருடைய கடும் பிரயா சங்கள் மத்தியில் தேவ கிருபை அவருக்கு போதுமானதாக இருந் தது.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் நிற்பதும் நிர்மூலமாகதிருப்பதும் தேவ கிருபையே என்பதை முழுமையாக உணர்ந்து, அக் கிருபை என் வாழ்வில் பிரயோஜனமாயிருக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - புலம்பல் 3:22