புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 12, 2019)

மேலான சாட்சி

எபிரெயர் 12:1

விசுவாசத்தைத் துவக்கு கிறவரும் முடிக்கிறவரு மாயிருக்கிற இயேசுவை நோக்கி,


அந்த மனிதனைப் பாருங்கள்! எவ்வளவு ஐசுவரிய செழிப்புடன் வாழ் கின்றான் அவனிடத்திலிருப்பதில் கொஞ்சமாவது எனக்கு இருந்தால் எவ்வளவு நன்மைகளை செய்வேன் என்று சில மனிதர்கள் கூறுவ தைக் கேட்டிருக்கின்றோம். ஆனால், தேவ ஊழியராகிய பவுல் தன் னுடைய மரணம்வரை கிறிஸ்துவின் நற்செய்திக்காகவே அநேக பாடுக ளையும், உபத்திரவங்களையும் சகித்தார், அதில் கொஞ்சம் என்றா லும் நான் கிறிஸ்துவின் நற்செய்தி க்காக செய்ய வேண்டும் என்று கூறு வதற்கு மனிதர்கள் தயக்கமடைகின் றார்கள். நாங்கள் எங்களுக்கு முன் இருக்கும் சாட்சிகளை எவ்வண்ணமாக பார்க்கின்றோம் என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ் தவ வாழ்;க்கையிலே எங்களுக்கு நிய மிக்கப்பட்ட சேவை உண்டு. நல்ல மேய்ப்பனாகிய இயேசு தம்மு டைய மந்தைகளாகிய எங்கள் நிலைமைகளை அறிந்தவர். கறவலாடு களை மெதுவாகவும், குட்டிகளை தன் தோள்களின் மேலும் தூக்கிச் சுமக்கின்றவர். அவனவனுடைய திராணிக்கு மேலாக ஒருவனையும் சோதிக்காத தேவனவர். பாடுகளை சகிக்கத்தக்கதான பெலனையும் தம்முடையவர்களுக்கு அருள்கின்றார். ஆகவே தேவனுடைய சித்தத்தி ன்படி அவரவர் வாழ்க்கையில், சேவையும், அதனோடு வரும் பாடு களும் இருக்கின்றது. ஒரு வேளை, அப்போஸ்தலராகிய பவுல் அனு பவித்த பாடுகளைப் போன்ற பாடுகள் எங்களுக்கு இல்லாதிருக்க லாம். “பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப் படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். ஆனால், கிறிஸ்துவின் நற்செய்திக்காக எதையும் சகிப்பேன் என்ற தேவ ஊழியராகிய பவுலு க்கிருந்த மனநிலை எங்களுக்கு இருக்க வேண்டும். கிறிஸ்து இந்த உலகத்திலே தோன்றுமுன் வாழ்ந்த முன்னோடிகளாகிய தேவனுடைய தாசர்கள், தங்களுக்கு முன்பிருந்த தேவ மனிதர்களுடைய வாழ்க் கையின் சாட்சிகளை முன்வைத்து பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந் தார்கள். நாங்களோ அவர்களிலும் பாக்கியம் பெற்றவர்கள். கிருபை யின் நாட்களில் வாழும் எங்களுக்கு, தேவ மைந்தனாகிய இயேசு வின் இப்பூவுலக வாழ்க்கை சாட்சியாக இருக்கின்றது.

ஜெபம்:

அன்பின் பிதாவே, பரலோகத்திலே எங்களுக்கு வைக்கப்பட்டிருக் கின்ற மேன்மையை உணர்ந்து, எனக்கு வைக்கப்பட்டிருக்கின்ற சேவையை செய்து முடிக்க என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 3:14