புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2019)

நல் நடக்கை

1 பேதுரு 2:12

நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்


மேற்கத்தைய நாடுகள் ஒன்றிலே, ஞாயிறு காலையிலே, அதி வேக மாக செல்லும் வாகனம் ஒன்றை பொலிசார் இடைமறித்தார்கள். போ டப்பட்ட வேக எல்லையை தாண்டி அதிவேகமாக வாகனத்தை செலு த்தும் காரணம் என்ன என்று பொலிசார், சாரதியிடம் கேட்டார்கள் சாரதி: நான் ஆலயத்திற்கு செல்கின்றேன், அங்கு எனக்கு சில பொறுப்புக்கள் உண்டு, இன்று தாமத மாகிவிட்டதால், வேகமாக செல்கின் றேன் என்று மறுமொழி கூறினார். முன் னுதாரணமாக இருக்க வேண்டிய உம் மைப் போன்றவருக்கு நிச்சயமாக தண் டனை வழங்க வேண்டும் என பொலி சார், சாரதியிடம் கூறினார். அந்தச் சாரதியோ சபையின் மூப்பனாக இரு ந்தார். தான் தாழ்மையோடும், தன் கிரியையின் நிமித்தம் மனவருத்தத்தோடும், தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டேன் என்று தன் அனுபவத்தை மற்றய விசுவாசிகளுடன் பகி ர்ந்து கொண்டார். அன்று காலையிலே, பொலிசாரின் சொற்கள் தேவ னுடைய பிள்ளையின் மனக்கண்களை திறந்து விட்டது. தேவனுடைய நியமங்களுக்கு முரண்படாத, எல்லா நாட்டுச் சட்டங்களுக்கும் நாங் கள் கீழ்ப்படிந்து, மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்க்கையை வாழ வேண்டும். (ரோமர் 13:1-7). மேற்குறிப்பிடப்பட்ட உதாரணத்தைப் போல, எங்கள் நாளாந்த வாழ்க்கையிலே பலவிதமான சூழ்நிலை களை நாங்கள் எதிர்நோக்குகின்றோம். நாங்கள் என்னத்தை பிரசங்கிக் கின்றோம் பின்பு என்னத்தை வாழ்க்கையில் நடப்பிக்கின்றோம் என்று பலர் எங்களை நோக்கிப் பார்க்கின்றார்கள். ஆலயத்திலே மட்டுமல்ல, நாங்கள் வேலை செய்யும் இடங்கள், கல்வி கற்கும் இடங்கள், வெளி இடங்கள், விழாக்கள், மற்றும் ஒன்றுகூடல் போன்ற வாழ்க்கையின் நிக ழ்வுகளில் நாங்கள் எங்கள் சாட்சியையை காத்துக் கொள்ள வேண்டும். எங்கள் நடக்கைகளின் நிமித்தம் தேவனுடைய நாமம் தூ~pக்கப்ப டாமலும், எங்களை நோக்கிப் பார்க்கும் சிறார்கள் முன்னிலையிலும் நாங்கள் நற்சாட்சியான வாழ்க்கை வாழ வேண்டும். அத்துடன் கீழ்ப் படியும் மனநிலை உடையவர்களாகவும் வாழவேண்டும். கிறிஸ்து வில் இருந்த மனத்தாழ்மையும் சாந்தமும் எங்களிலும் வெளிப்பட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, என் நிமித்தமாக, மற்றவர்கள் மத்தியிலே, உம்முடைய நாமம் எந்த விதத்திலும், தூஷிக்கப்படாதபடிக்கு என் நடக்கையை காத்துக் கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 3:15