புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2019)

நாளாந்த கிரியைகள்

யாக்கோபு 2:22

விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.


ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, நீங்கள் அவர்களைப் பார்க்கும் போது மனதிலே இரக்கம் வருவது நல்லது. அவர்களுக்கு ஆறு தலான வார்த்தைகளைக் கூறுவது நல்லது. அதாவது, நீங்கள் சமா தானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று அவர் களை வாயினாலே ஆசீர்வதிக்கலாம். ஆனால், அவர்கள் உங்களோடு பேசும் போது, பசியாய் இருக்கின்றார்கள். தகுந்த வஸ்திரமில்லாதி ருக்கின்றார்கள். அதாவது, உங்கள் மனதுருக்கம் நல்லது, உங்கள் ஆறுதலான ஆசீர்வாதமான வார்த்தை கள் நல்லது ஆனால் அவர்களுடைய பசியை ஆற்ற “ஏதாவது” உணவை கொடுக்காவிட்டால் உங்கள் இரக்கமும், உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் கிரி யை அற்றதாக இருக்கும். தகுந்த வஸ் திர மில்லாமல் உங்கள் முன்னிலை யில் நிற்கின்றவனுக்கு நீங்கள் உங்க ளால் முடிந்த உதவியை செய்யாமல், மனதுருகி ஆறுதல் வார்த்தைகளை கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அது போலவே, இயேசுவை விசுவாசித்தால், அவர் கூறிய வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும். அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளுவதுடன் விட்டுவிட்டால், அங்கே கிரியை இருக்காது. எடுத் துக் காட்டாக, நான் இயேசுவின் பிள்ளை நான் ந~;டம் வந்தாலும் பொய் பேச மாட்டேன் என்று அறிக்கையிடுவது நல்லது. இப்போது, அந்த அறிக்கை பரீட்சைக்கு வருகின்றது. ஒரு இக்கட்டான சூழ் நிலை, ஒரு சகோதரனுக்கு எதிராக அவதூறான காரியத்தை அறிந் தோ அறியாமலோ பேசிவிட்டீர்கள். ஆனால் அதை நிரூபிப்பதற்கு அந்த சகோதரனுக்கு தற்போது சாட்சிகள் இல்லை. வேதம் கூறுகி ன்றது, ஒரு குற்றம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் உறுதி செய்யப்படும். இப்போது உங்கள் ஊழியர் இந்த காரியத்தை விசா ரிக்கின்றார். இயே சுவை உண்மையான இருதயத்திலே விசுவாசிக்கி ன்றவன், சாட்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தன் இருத யத்தை காண்கின்ற இயேசு முன்னிலையில் உண்மையை கூறி தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு, கிரியைகளினாலே, மன்னிப்பைப் பெற் றுக் கொள்ளுவான்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, என்னுடைய அனுதின வாழ்க்கை வழியாக, என் இருதயத்தில் நான் செய்த விசுவாச அறிக்கையை உறுதி செய்யும்படி என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1