புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2019)

நன்மை ஆளக்கடவது

ரோமர் 12:21

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.


ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்;, தீமையை வெறு த்து, நன்மையைப்பற்றிக் கொண்டிருங்கள் என்று பரிசுத்த வேதாகம த்திலே வாசிக்கின்றோம். தீமையானது தேவனுடைய குணாதிசயம் அல்ல, எனவே அது தேவனுடைய பிள்ளைகளாகிய எங்களுக்குரியதல்ல. ஒருவன்; உங்களுக்கு தீமை செய்யும் போது, அவன் எதிராளியா னவனாகிய பிசாசானவனுடைய சதித் திட்டத்தை இந்த பூமியிலே நிறைவே ற்றுவதற்கு ஒரு கருவியாக மாறுகின் றான். அந்த தீமைக்குப் பதிலாக, நீங்க ளும் ஒரு தீமையை செய்யும் போது, பிசாசானவனுடைய சதித்திட்டத்தை ஆமோதிக்கின்றவர்களாக மாறிவிடுகி ன்றீர்கள். அவனுடைய குணாதிசயம் உங்களில் பெருக ஆரம்பிக்கும். அத னால் பிசாசானவன் உங்கள் வாழ்க்கையிலே வெற்றி கொள்கின்றான். ஆனால், ஒருவர் உங்களுக்கு தீமை செய்யும் போது, அதற்கு பதிலீடாக நீங்கள் அவருக்கு நன்மை செய்வீர்கள் என்றால், நீங்கள் பிதாவாகிய தேவனுடைய குணாதிசயத்தை உங்களில் வெளிப்படு த்துவீர்கள். சில வேளைகளிலே நன்மையை நடப்பிக்கும் சந்தர்ப்ப ங்கள் இல்லாதிருக்கலாம். அப்படியானால், எப்படி தீமைக்கு நன்மை செய்வது? உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். அப்படிச் செய்யும் போது, நீங்கள் தேவனுடைய திருச்சித்தத்தை உங்கள் வழியாக நிறைவே ற்றுவதால், தேவனுடைய நன்மைகள் உங்கள் வாழ்வில் பெருகும். உங் களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கி றார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கி றார்களே. இந்த பூமியிலே நன்மை பெருகத்தக்கதாக பிதாவாகிய தேவன்தாமே எங்களை தம்முடைய பிரதிநிதிகளாக ஏற்படுத்தியிருக்கி ன்றார். நீங்கள் தீமையை எங்கள் மாம்ச பெலத்தாலும், வன்மம், பகை, மற்றும் மிரட்டல்களாலும் மேற்கொள்ளும்படியாய் அழைக்கப்ப டவில்லை. நீங்கள் பொறுமையோடு கூடிய நன்மையான கிரியைகளி னாலும், தீமை செய்கின்றவர்களுக்காக ஏறெடுக்கப்படும் விண்ணப்ப ஜெபத்தினாலும் தீமைகளை மேற்கொள்ளுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள பிதாவே, நான் தீமையினால் வெல்லப்படாமல், தீமையை உம்முடைய திவ்விய குணாதிசயங்களினால் ஜெயிக்கும்படி ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 3:7-8