புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2019)

குமாரனுக்கு ஒத்த சாயல்

ரோமர் 8:29

குமாரனுடைய சாயலு க்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;


பக்கத்து வீட்டிருலிருக்கும் அண்ணா, அழகாக கிற்றார் வாசிக்கின்றார். எனக்கும் கிற்றார் பழக ஆசையாக இருக்கின்றது. என்னுடைய பிறந்த தின பரிசாக எனக்கு ஒரு கிற்றார் வாங்கித் தாருங்கள் என, மக னானவன், தன் தந்தையிடம் கேட்டான். அவர்களும் அவனுடைய ஆசைப்படி வேண்டிக் கொடுத்தார்கள். சில கிழமைகள் ஆர்வமாக பயிற்சி செய்தான், பின்னர் கிற்றார் வீட்டில் அழகுப்பொருளாக ஒரு மூலை யிலே வைக்கப்பட்டிருந்தது. அப்படியி ருப்பதனால், இனிமையான இசையை ஒருவரும் கேட்டு ரசிக்கப்போவதி ல்லை. தேவன்தாமே, தம்முடைய பிள் ளைகளின் பக்திவிருத்திக்காக பல வர ங்களை கொடுத்திருக்கின்றார். அப்போஸ்தலர், சுவிசே~கர், தீர்க்க தரிசி, மேய்ப்பர், போதகர் போன்ற ஊழியங்கள், குணமாக்கும் வர ங்கள் உட்பட பலவிதமான ஆவியின் வரங்களை அன்பளிப்பாக கொடுத்திருக்கின்றார். குணமாக்கும் வரத்தை உடையவன், ஊர் ஊராக சென்று மனிதர்களை குணமாக்கியபின், அந்த மனிதர்களின் வாழ்க்கையின் முறையில் தேவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் உருவாகாவிட்டால் அந்த வரத்தினால் அவனுக்கு வரும் பலன் அற்பமே. தேவன் கொடுத்த வரங்களை ஒருபக்கமாக வைத்துவிட்டு, நாங்கள் எங்கள் பாட்டிற்கு வாழ்ந்தால், அந்த கிற்றாரை வேண்டி, ஒரு மூலையில் போட்ட வாலிபனுக்கு நாம் ஒத்திருப்போம். எங்கள் சபையிலே, வேத பாடங்களை அருமையாக சொல்லித்தரும் போதகர் ஒருவரை தேவன் தந்திருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். ஏன் அந்த வரத்தை தேவன் எங்கள் சபையினருக்கு கொடுத்தார்? நாங்கள் வெளியிலே சென்று, எங்கள் சபையிலேதான் அதி சிறந்த வேத வல்லுனர் இருக்கின்றார் என பெருமையுடன் மற்றவர்களுக்கு கூறு வதற்காகவா? இல்லை! நாங்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு, எங்கள் சுபாவங்கள் கிறிஸ்து இயேசுவுக்கு ஒத்ததாக மாறும்படிக்கே தேவன் அப்படியான வரத்தை தந்திருக்கின்றார். வரங்கள் பல இருந்தும் நாங்கள் கிறிஸ்துவைப் போல மாறாவிட்டால், எங்களின் முடிவு, மற்றய உலக மனிதர்களின் முடிவிலும் பரிதாபமுள்ளதாக இருக்கும். எனவே தேவன் கொடுத்த வரங்களின் கருப்பொருளை உணர்ந்தவர்களாக, திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலை அடையும்படிக்கு எங்களை ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, நீர் தந்த வரங்களினால், நாங்கள் பக்திவிருத்தியடைந்து உம்முடைய திருக் குமாரனின் சாயலில் வளர்ந்து பெருகும்படிக்கு எங்களை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 4:12-15