புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2019)

பயனுள்ள கருவிகள்

ஏசாயா 64:8

நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.


சிற்பங்களை செதுக்கும் சிற்பியின் கையில், பெரிய கல் ஒன்றையும், செதுக்கும் உபகரணத்தையும் கொடுத்தால், அதிலிருந்து ஒரு அழகான சிற்பம் வெளிப்படும். குயவன் களிமண்ணை எடுத்து பல பாத்திர ங்களை உருவாக்குகின்றான். நாங்கள் யாவரும் தேவனாகிய கர்த்த ருடைய கரத்தின் கிரியைகளாக இருக் கின்றோம். வேதத்திலே காணும் பல பாத்திரங்கள், தேவனுடைய கரத்தின் கருவிகளாக தங்களை ஒப்புக் கொடு த்திருந்தார்கள். கிதியோன் என்னும் மனி தனின் நாட்களிலே, இஸ்ரவேலர் மீதி யானியர் என்னும் அந்நிய நாட்டுப் படைகளால் மிகவும் ஒடுக்கப்படடு, வலுவிழந்த நிலையில் இருந்தார்கள். கிதியோன் இஸ்ரவேலிலே சிறியவனும் ஒரு சாதாரண மனிதனுமாக இருந்தான். இஸ்ரவேலை மீதியானியர் கையிலிருந்து விடுவிக்கும்படி, அவனை கர்த்தர் அழை த்த போது, இஸ்ரவேலை மீட்க நான் எம்மாத்திரம் என அவன் கூறி னான். கர்த்தர் கிதியோனை நோக்கி: உனக்கிருக்கும் இந்த பெல த்தோடு போ நான் உன்னோடு கூட இருப்பேன் என்றார். அவன் தன்னை ஒப்புக் கொடுத்த போது, கிதியோன் வழியாக கர்த்தர் மகத் தான வெற்றியை கொடுத்தார். அவன் கர்த்தருடைய கரத்தின் உப யோகமுள்ள கருவியானான். எங்களை உருவாக்கியவரே நாங்கள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அறிந்தவராக இருக்கின்றார். அதை மறந்து நாங்கள் எங்கள் விருப்பங்களின்படி காரியங்களை நடத்தி வந்தால், நாங்கள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை, நாங்கள் நிறை வேற்ற மாட்டோம். “இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதி தும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” என்று தம் முடைய ஜனங்களுக்கு கூறிய தேவனுடைய சித்தத்திற்கு எம்மை நாம் ஒப்படைக்கும் போது நாங்களும் உபயோகமுள்ள அவருடைய கரத்திலே கருவிகளாக மாற்றப்படுகிறோம். எங்கள் வாழ்வின் நாளாந்த கிரியைகளில் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப் பட நாங்கள் இடங் கொடுக்க வேண்டும். நாம் அந்தகார வல்லமையாகிய இருளின் அதிகாரத்தை தகர்த்தெறியும் ஜெபமாகிய போராயுதத்தை பெற்றவர்களாக இருக்கின்றோம். நாங்கள் தீமையை தீமையால் வெல்லும் கருவிகள் அல்ல. தீமையை திவ்விய சுபாவங்களால் வெல்லும் புதிதும் கூர்மையுமான இயந்தரமாக இருக்கின்றோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய கரத்தின் கிரியை களாகிய நாங்கள், உம்முடைய கரத்திலுள்ள பயனுள்ள கருவிகளாக சிறந்து விளங்க எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரே 51: 19-20